பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 27 / 21

காட்சி 27

காட்சி 27

மூல ஸ்கேன் 130, 131

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

பாழடைந்த மண்டபம்.

[கண்ணன் கொடியுடன் வருகிறான்...]

பயங்கரக் குரல்கள்:— டே, கண்ணா! நில்!

கண்:— யார்?

குரல்:— கொடியைக் கீழே போடு!...

கண்:— நான் குமரன் பரம்பரை—சின்னச்சாமி—சிவலிங்கம்—அரங்கநாதன்—வீரப்பன்—போன்ற சாவுக்கு அஞ்சாத வீரர்களின் வழி வந்த கழகத்தின் தொண்டன்...

குரல்:— ம்! கொடியைக் கீழே போடு!

கண்:— முதலில் உன் உத்தரவைக் குப்பையிலே போடு!

குரல்:— வேறு பக்கம்கள்ளக் கடத்தல்—கொள்ளை லாபம் கள்ள மார்க்கெட்டைக் கண்டித்துப்பேசமாட்டேன்என்றுசொல்; இல்லாவிட்டால்... கொலை!... கொலை!!!

கண்:— ஹ ஹ ஹா... ஓகோ... கள்ளமார்க்கெட்—கள்ளக் கடத்தல்... கொள்ளை லாபம்... கலப்படம்—கறுஞ்சந்தை—எல்லாவற்றுக்கும் பிரதிநிதிகளாக; நீங்கள் கொலைக் கருவியோடு வந்திருக்கிறீர்களா? அய்யா பெரியவர்களே! பரம்பாதகர்களே! உங்களைக் காப்பாற்ற ‘காகிதப்பூ’ இருக்கிறது... அங்கே போங்கள்...

குரல்:— போகாதே நில்!...

குரல்:— கொடியைக்கீழேபோடு!... மண்டியிட்டு மன்னிப்புக் கேள்!... இல்லையேல்... உன் மார்பைத் துளைக்கும் துப்பாக்கிச்சுகுண்டு!... விணே சாகாதிே...

குரல்:— அநியாயமாகச் சாகாதே!...

குரல்:— சாகாதே!

கண்:— ஹ ஹ ஹ! பைத்தியக்காரர்களே வேலும் வாளும் உண்டாக்கிய ரத்தக் கடலிலே பயங்கர மூச்சு விட்டுக் கொண்டு மிதந்து செல்லும் வீரர்களின் மண்டையோடுகளை முத்தமிட்டபடி பயணம்நடத்தும் முறிந்த எலும்புத் துண்டுகளையும்—அறுந்த நரம்புத் துகள்களையும் கண்டு முகாரி பாடாமல்—முதுகு காட்டாமல்—முகஞ்சுளிக்காமல் முன்னேறு நீ முன்னேறு நீ என்று முரசொலித்து, எஞ்சிய வீரர்களை நெஞ்சுரங் கொள்ளச் செய்து. எந்த நேரத்தில் எந்தப் பக்கமிருந்து ஈட்டி பாயுமோ, எதிரியின் கணை பாயுமோ? என்று சாவு முகட்டிலே வினாடிகளைக் கணக்குப் பார்ப்பதும் வீரர்களுக்கு அழகில்லை என்ற போர்க்களத்து அரிச்சுவடியைத் தவறியும் மறந்து விடாமல், மரணம் மாவீரனுக்குத் தரப்படும் மலர்ச் செண்டு, மங்கையின் இதழை விட சுவையானது என்ற மனோபலத்தோடு படையை நடத்திச் செல்பவனே பராக்ரமசாலி—பைந் தமிழன் என்ற பாசறைக்காவியத்தின் சிறப்புப் பாயிரத்தைப்படித்தவன் தான்நான். அதனால் சாவுக்கு அஞ்ச மாட்டேன்; ஆனால் காரணமில்லாமல் சாகமாட்டேன்...

குரல்:— அப்படியா?...ஹ ஹ ஹ...!

குரல்:— ஹ ஹ ஹ!...

குரல்:— சாவுக்குத் தயாராகிக் கொள்!

(காவேரி மரகதம் ஓடி வருகிறார்கள்)

காவேரி:— கண்ணா! கண்ணா!

கண்:— அம்மா!...

(துப்பாக்கி ஒலி கேட்கிறது)

காவேரி:— ஆ!

(கண்ணணை நோக்கி துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் போது காவேரி குறுக்கிறாள்)

[காவேரி பிணமாகச் சாய்கிறாள்...]

கண்:— அம்மா!...

மரக:— அம்மா! அம்மா!!

கண்:— அம்மா! அம்மா!... போய்விட்டீர்களா அம்மா!... பொல்லாததை மறுத்துப்புனிதமானதை நிலை நாட்ட வேண்டுமென்று மகனுக்கு ஆணயிட்ட மறக்குலத் தாயே!... புறநானூற்றுப் பெருமாட்டீ! உங்கள் உயிரைக் கொடுத்துஎன் உயிரைக் காப்பாற்றி மாதாவின் பெருமைக்கு மணிவிளக்கு ஏற்றி வைத்துவிட்டீர்கள்... ஆனால்; தாயைக் காப்பாற்ற முடியாத மகன் என்ற தீராத பழியை என் மீது சுமத்தி விட்டீர்களே; ஏன் தாயே; ஏன்?...

தாயே! தந்தையின் ரத்தம் தமிழ் வளர்க்கப் பயன்பட்டது... உங்கள்ரத்தம் தமிழ்ப் பகைவர்களை வெல்வதற்குப் பயன்படட்டும்! தமிழர் பெரும் படைக்கு உங்கள் செங்குருதி, வீரத்திலகமாகட்டும்!... வெற்றித் திலகமாகட்டும்!...

இந்த ரத்தச் சிகப்பு; செக்கர் வானத்துச் சிகப்பாகக் கீழ்த்திசையில் உதயசூரியன் புறப்படப் போவதை அறிவிக்கின்ற சிகப்பாக ஆகட்டும்!... அம்மா! அம்மா!...

(காவேரியின் உடலில் வழியும் இரத்தத்தை எடுத்து கண்ணன் திலகமிட்டுச் சூளுரைக்கிறான்.)

(முற்றும்)