பொருளடக்கம்காகிதப்பூ

காட்சி 26 / 21

காட்சி 26

காட்சி 26

மூல ஸ்கேன் 129, 130

X

கீழே அச்சுப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — பேச்சாளர் பெயர்கள், சுருக்கங்கள், அரங்கக் குறிப்புகள், நிறுத்தக் குறிகள் அனைத்தும் மூலத்தின்படியே.

காவேரி வீடு

[காவேரி மரகதம்... இருக்கிறார்கள்.]

மரகதம்:— எப்படியம்மா; நான் சொன்னதை நிறைவேற்றி விட்டேனா இல்லையா?...

காவேரி:— மரகதம்! எனக்கொரு மகள் இல்லாத குறையை நீ போக்கி விட்டாய்... வீரத்தந்தையை இழந்து விட்ட கண்ணனுக்கு உன்னைப்போல ஒரு வீரத்தங்கை கிடைப்பதென்றால் அது அவன் செய்த பாக்கியந்தான்.

காவேரி:— அம்மா! கண்ணன் காங்கிரசை விட்டு வெளியியேறியது... தாங்கிரஸ்காரர்களைவிட வேற சில பேருக்கு ரொம்ப ஆத்திரமா இருக்கும்மா!...

காவேரி:— என்ன செய்றது... உண்மையைச்சொல்றதுக்கு ஊருக்குப்பயந்தா முடியுமா?... கள்ள மார்க்கெட்காரன் கறுப்புச் சந்தைக்காரன் எல்லாருமே கண்ணனுக்கு விரோதிதான்—கண்ணனோ அல்லது கழகமோ, தங்கள் புழைப்பிலே மண்ணைப்போடு துன்னா; இப்படிப்பட்டவர்களுக்கு ஆத்திரம் வரத்தானே செய்யும்...!

(மாலா ஓடிவருகிறாள்)

மாலா:— அம்மா! அம்மா! மரகதம்! ஆபத்து! கண்ணனுக்கு ஆபத்து!...

காவேரி:— ஆ!

மாலா:— ஆ!... என்ன மாலா?

மாலா:— நம்ப ஊர்க் கோடி பாழடைஞ்ச மண்டபத்துக் குள்ளே நாலைஞ்சு பேர் பேசுனது என் காதில்விழுந்தது... ராத்திரி கண்ணன், கூட்டம் முடிச்சிட்டு திரும்பி வரும் போது கொலை செய்கிறதா திட்டம் போட்டிருக்காங்க...

காவேரி:— ஆ!...

மர:— ஒருத்தன் கையில் துப்பாக்கியைக் கூட நான் பார்த்தேன்... என்னைப் பாத்துறபோராங்கண்ணு ஓடிவந்துட்டேன்...

காவே:— ஆ! கண்ணா!... மரகதம்... நான் என்ன செய்வேன்...

மரக:— பதறாதிங்கம்மா... வாங்க அந்த இடத்துக்குப் போவோம்... மாலா!... நீ போயி... பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல தகவல் கொடு...

(மூவரும் புறப்படுகிறார்கள்)