பகுதி 3 / 3
பலிபீடம் நோக்கி — திரைப்படக் காட்சியிலிருந்து திரும்புதல் மற்றும் முடிவுரை
Towards the Sacrificial Altar — Return and Conclusion
இத்தலைப்பு மூலக் காப்பகத்தின் வாசிப்புப் பிரிவுக்கான விளக்கக் குறிப்பே; 1947 பதிப்பில் அச்சிடப்பட்ட தலைப்பு அல்ல.
மூல ஸ்கேன் scan 30 from `படம் முடிந்துவிட்டது...` through scan 33
கீழே 1947 முதற்பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
படம் முடிந்துவிட்டது. பாடம் கற்றுக்கொண்டீர்களா? பலிபீடம் நோக்க இப்பொழுது நீங்கள் எத்தனை பேர் தயார்?
பலிபீடம் நோக்குங்கள். பலிபீடத்திலே ...
சேரனின் மானம் தூளாக்கப்பட்டுக் கிடப்பதை நோக்குங்கள். நாயக்கர் பரம்பரை நாசமாகிக் கிடப்பதை நோக்குங்கள். ராஜராஜ சோழனின் பொக்கிஷம் இறைந்து கிடப்பதை நோக்குங்கள். பலிவாளுக்கு கம்பனின் மாலை சூட்டப்பட்டிருப்பதை நோக்குங்கள். காமராஜர்கள், கலியாணசுந்தரங்கள், நாமக்கல்லார்கள் அந்த பலிபீடம் நோக்கி கைகூப்புவதையும் நோக்குங்கள். அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். ஆபத்து என்று அறிவிப்புவிடுங்கள். அதையும் மீறிச்சென்றால்... நீங்கள் பலிபீடம் நோக்கிப் பாயுங்கள்.
ஆரியபலிபீடத்திலே நீங்கள் சிந்தும் ரத்தம் அதன் அஸ்திவாரத்தை அசைத்ததால் பொங்கிய வியர்வைக் கடலாக இருக்கட்டும்.
அந்த பலிபீடத்திலே பெருக்கெடுத்தோடும் உங்கள் குருதி வெள்ளம், அதன் ஒரு மூலையைக் குத்தி உடைக்கும்போது பெருகியதாயிருக்கட்டும்.
உங்கள் தலை பலிபீடத்திலே உருளட்டும். ஆனால் கம்பனின் ‘கண்மூடி’த் தனியைப் போல அல்ல! கனல் கக்கிடும் கண்களோடு அது வெட்டப்பட்டட்டும்.
உங்கள் தசைகள் பலிபீடத்திலே கிழித்தெறியப்பட்டட்டும். ஆனால் ஆஞ்சநேயனின் ரோஷமற்ற தசையைப் போல அல்ல! தன்மான ரத்தத்தின் சூடு தணியாமல் அவை கழிக்கப்பட்டட்டும்.
நீங்கள் சாகப் பயன்படும் சமுதாயமா?... சமருக்கு...அஞ்சும் இனத்தவரா?... ரத்தக்கடல் உங்கள் மூதாதையரின் நீச்சல் குளம். வேலும் வாளும் அவர்கள் விளையாட்டுக் கருவிகள். போர்க்களம் அவர்கள் தவழும் தாழ்வாரம். பாசறை அவர்கள் படுத்திருந்த தொட்டில்!... அவ்வழி வந்தோரே! ஆளப்பிறந்தவரே! தமிழுக்காகத்தான் முத்துவையும், நடராசனையும் தத்தம்செய்தவரே!
பலிபீடம் நோக்குங்கள்... பகுத்தறிவுச் சம்மட்டி, கையில் இருக்கட்டும்.
பாராண்ட இனத்தை ஆசைகாட்டி பலிபீடத்திற்கு இழுத்துச் சென்ற கைகாட்டிகள் அதோ!...
ஆலயங்கள், அக்கிரகாரங்கள், அலங்கார மடங்கள், பாரத ராமாயணங்கள், பழைய பஞ்சாங்கங்கள், மோட்ச நரக சொர்க்கங்கள் அத்தனையும் பலிபீடத்தில் நிறுத்துங்கள். சுக்கல் சுக்கலாக உடைத்தெறியுங்கள்! துண்டம் துண்டமாக நொறுக்குங்கள். அணு அணுவாகக் கொளுத்துங்கள். முதலில் அந்த இந்துமதக் கொடுவாள் முறியட்டும்.
இந்துமதந்தான் உங்களை இன்று சேரியில் தள்ளியிருக்கிறது. இந்துமதந்தான் உங்கள் பெண்களை விதவைகளாக்கி வைத்திருக்கிறது. இந்துமதந்தான் உங்கள் இனத்தை மறைத்திருக்கிறது. இந்து மதந்தான் உங்களை மிருகங்களாக நடத்துகிறது.
இந்துமதந்தான்... ஆலயங்கள் அமைத்து, உங்கள் திரண்ட செல்வத்தைத் தின்று கொழுக்கிறது.
இந்துமதந்தான் மனுதர்மத்தின் பெயரால் உங்களை ‘எதிர்த்துப் பேசாதே! எட்டி நில்!’ என்று தடைஉத்தரவு போட்டிருக்கிறது.
இந்துமதந்தான் ராமாயணத்தை உண்டாக்கி ‘செருப்பாண்டாலும் சரி’ என்ற அளவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நிலைக்கவிட்டிருக்கிறது.
இந்துமதந்தான் உங்களை சூத்திரர்களாக்கி... முதலாளிகளின் கையில் ஒப்புவித்து.....உதிரத்தை உறிஞ்சும்படி செய்திருக்கிறது.
அந்த மதக்கொடுவாள்... உங்கள் சம்மட்டி வீச்சால் பொடி பொடியாக சிதறி மண்ணைப் போகட்டும், பலிபீடம் படார்.. படார்.. எனத் தெறித்துத்துகள் தூளாகப் பறக்கட்டும் கண்காட்டி, காம மூட்டி... கழுத்தையறுப்பதற்கு.... வழி காட்டும் ஆரியக் கைகாட்டிகள் அக்கினிக்கு இரையாகட்டும்.
அழிந்து போதும்...இனி ஆள்வோம், வீழ்ந்தது போதும்...இனி வாழ்வோம். எங்கே நடக்கட்டும் உங்கள் வேலை! பாடிக்கொண்டே உங்கள் படை கிளம்பட்டும்.
ஆரிய பலிபீடம்......
அங்கே இந்துமதக்கொடுவாள்! வாள் அழிக்கப் புறப்பட்டோம்...... இதோ அவை தூள்! தூள்!
மு. கருணாநிதி · பலிபீடம் நோக்கி, முதற்பதிப்பு ஏப்ரல் 1947. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்