பொருளடக்கம்

குறளோவியம்

குறளோவியம்

முதற்பதிப்பு நிழற்படமும் பதிப்பகக் குறிப்பும்

அச்சுப் பக்கம் xvxvi · ஸ்கேன் 1617

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

காப்பக விவரிப்பு: A black-and-white group photograph appears in the upper half of the page.

குறளோவியம்

முதற்பதிப்பு 17.2.85 அன்று சென்னையில் வெளியிடப்பட்டபோது அறிஞர் பெருமக்கள் ஆற்றிய உரைகளில் சில பகுதிகள் வருமாறு...

ஆறாம் பதிப்பின் பதிப்புரை

கலைஞர் அவர்கள் எழுதிய ‘குறளோவியம்’ நூலைப் படிக்கின்ற போது ஒவ்வொரு பக்கமும் தெவிட்டாத தெள்ளமுது. நெஞ்சை அள்ளுகின்ற வர்ணனைகள்; படிக்கப் படிக்க இன்பமூட்டும் கதைகள்.

இவ்வாறு திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலில் உள்ள குறட்பாக்களுக்கு அழகாக விளக்கத்தை எழுதி உள்ளார்.

இந்தநூல் எங்கள் பதிப்பக வாயிலாக ஐந்து பதிப்பு வெளியிட்டு அதை தொடர்ந்து ஆறாம் பதிப்பாக வெளிவருகிறது. பாரதி பதிப்பகத்தின் பெருமைக்குரிய வெளியீடு மற்றும் தமிழர்களின் ஒப்பற்ற நூலான குறளோவியத்தை ஆறாம் பதிப்பாக அச்சிட்டு வெளியிடுவதற்கு எங்களுக்கு அனுமதி அளித்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதிலுள்ள ஒவ்வொரு குறளுக்கும் தேவையான படங்களை அழகாக வரைந்து தந்த ஓவியர்கள் திரு. ஜெயராஜ் அவர்களுக்கும், திரு. பத்மவாசன் அவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நூல் வெளிவரத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தந்த தலைவர் கலைஞர் அவர்களின் உதவியாளர் திரு. கோ. சண்முகநாதன் அவர்களுக்கும், தமிழ்க்கனி பதிப்பகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த ஆறாம் பதிப்பு வெளியிட எங்களுக்கு பக்கபலமாக இருந்து அனைத்து வகையிலும் உதவிய திரு. G. சிவநேச பாண்டியன் அவர்கள் (பின்னக்கிள் சாஃப்ட்வேர் (பி) லிட்.) திரு. T.S.P. முத்துராமன் செட்டியார் அவர்கள் (முத்துராமன் எண்டர்பிரைசஸ்), திரு. G. தேவராஜன் அவர்கள் (Retd. Chief Telephone Supervisor) திரு. A. முத்துராமன் செட்டியார் அவர்கள் (விசாலாட்சி பேப்பர் மார்ட்) திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் (மேலாண்மை இயக்குநர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) திரு. அகிலன் கண்ணன் அவர்கள் (தாகம்), திரு. அ. ராமநாதன் செட்டியார், திரு. ம. திருப்பதி செட்டியார் அவர்கள் (திருமகள் நிலையம்) ஆகியோருக்கும் எங்களது நன்றிகள்.

இந்த சிறந்த நூல் ஒவ்வொருவரின், குடும்ப வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஆறாம் பதிப்பை சிறப்பாக வெளியிட்டிருக்கிறோம். இதை வாங்கிப் பயனடையும் வாசகர்களுக்கு எங்கள் நன்றி!

சென்னை-17 1.1.2004

- பாரதி பதிப்பகத்தார்.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்