பொருளடக்கம்

10. கவிதையல்ல - கண்ணீர்க்கடல் !

கட்டுரை 10 / 10

கவிதையல்ல - கண்ணீர்க்கடல் !

Not a Poem — an Ocean of Tears!

அச்சுப் பக்கம் 48–48

scan 48 (the article opening) shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

[செல்வத்தை நினைக்கையிலே சிந்திய கண்ணீர்த்துளிகள்.]

இருட்டறையில் இருகண்கள் மூடிக்கொண்டு, உருட்டுகின்றார் உலகத்தார் என்றுசொல்வோர் அழுந்தட்டும் அறியாமை ! அதையுணர்த்த முழங்கிற்று பெரியாரின் முரசு ஒலி அவ்வழி வந்தோன்...அன்பன்...தோழன் அருமைச்செல்வம்......அறிவியக்க வீரன் ஞாயிற்றின் நல்லொளியில் ஆயிற்று காலமென்று அகன்றுவிடக் கருக்கல், அங்கே... கிழக்கினில் கிளம்பிய காலைக்கதிரவன் வெடுக்கென வீழ்ந்தான்...கடலில் என்றால், வையம் கலங்காதோ? வாடி வதங்காதோ! இருள் நீங்கி ஒளிபெறவே இந்நாடு முந்துங்காலை மருள் சூழ்ந்த சாவுமோகம் இளங்கதிரை மறைத்ததுவே!

*

குன்றெடுக்கும் நெடுந்தோளான் குலத்தினனே ! கொன்றொழிக்கும் கொடுவாளால்...குள்ளநரி ஆரியத்தை, குலைபிடுங்க குகைவிட்டு வெளிவந்த சிங்க ஏறே ! மலைத்தோளா ! மாணிக்கக் குன்றே ! ப்ழச்சளை. உன்பேச்சு ! பார்வையிலே பனிவீச்சு !

பார்ப்பனீயம் உனைப் பார்த்துவிட்டால் படைகண்ட கோழைபோல் நிலைகுலைந்து போகுமே. நீ போய்விட்டாய்...நின்னொடு நின் புகழ்போமோ ? தீ வைத்தாய் ஆரியக்காட்டில்! அது படபடென வெடிக்கையிலே பார்க்காமல் மறைந்து

பன்னீர்ச்செல்வமே ! உன் பால்வடியும் முகமெங்கே ? பாண்டியன் மீசையெங்கே ! பசியேறிய வெறிகடலின் பாழலைகள் ஓய்ந்தனவா உனைத்தின்று ! விட்டாய். “தின்னட்டும் தின்று மகிழட்டும்...என்னை எண்ணட்டும் திருவிடத்தா’ரென்றே எங்கொளிந்தாய் ? பணத்தினில் பிறந்து பணத்தினில் வளர்ந்தும் பாட்டாளிக் குணத்தினை எங்கனம் கற்றாய் ? கோமானே ! யாம் அழுதழுது உகுத்த கண்ணீர் ஓமான்கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும் ! பழுதற்ற திராவிடப் பொன்னாடு ! ஆரிய மதுவுண்ட மக்களெல்லாம் விழித்தெழுதல் இதுகாண்டல்...நின்பணிக்கு காணிக்கையாம். சுற்றி எதிர்ப்புகள் சூறாவளியாய்ச் சீறிடினும் வெற்றி எமக்கென்றே வெளிக்கிளம்பி விட்டோம் ! பஞ்சைகளல்ல நாங்கள் .......... தஞ்சைக் காவலன் சந்ததியார் ! வீழ்ந்திட நேரிடினும் நின் செயல்பாடி வீழ்ந்திடுவோம்.

கலைஞர் மு. கருணாநிதி · உணர்ச்சிமாலை. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்