கண்ணம்மா

என் இரு விழி மழைதனை காணாதே

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

என் இரு விழி மழைதனை காணாதே

என் இதயம் மகிழ்வதை காண்பீரே

போர்வாள் ஏந்தி என் மகன் பொன்முடி

புல்லரை வீழ்த்தி உயிர்துறந்தான்

புல்லரை வீழ்த்தி உயிர் துறந்தான்

(என் இரு விழி)

காதலுக்கு தடைசொல்லக் கூடாதென்று - ஒரு

கட்டழகுப் பெட்டகத்தை துணைசேர்த்த - அவன்

கருத்துக்கு ஏற்றவொரு கன்னி இளமானை

களம் சென்று திரும்பியபின் மணமுடிக்க காத்திருந்தேன்

அவனோ களிறுகளை பந்தாடி

புரவிகளை பஞ்சாக்கி

கயவர்களின் வாள்முனையை நெஞ்சில் தாங்கி

காதலியை தவிக்கவிட்டு காலத்தை நகர்த்துகின்ற

இந்தக் கிழவியையும் கண்ணீரில் மிதக்கவிட்டு

கடமையினை முடித்து விட்டான்

களிப்பொரு பக்கம் கண்ணில் நீர் ஒரு பக்கம்

களப்புகழ் பெற்ற மகனை வாழ்த்துகின்றேன்

கருவில் சுமந்த தாயல்லவோ

அதனால் வாடுகிறேன்

(என் இரு விழி)