கண்ணம்மா

இளைஞனே இளைஞனே நீ விழித்தெழு

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

இளைஞனே இளைஞனே நீ விழித்தெழு

கலைஞன் நான் அழைக்கின்றேன் விழித்தெழு

காற்றைப் போல விரைந்து வா

ஆற்றைப் போல பெருகி வா

உலகத்தைப் படித்து நீ உயர்ந்திடவே

உன்னை நீயே உணர்ந்திடவே

உழைப்பவர்க்கு துணை புரிந்திடவே

உடன்பிறப்பே என் உடன்பிறப்பே

(இளைஞனே)

யுவனும் யுவதியும் ஆர்த்தெழுந்தால்

யுகத்தையே மாற்றலாம்

ஜாதி மத பேத சரித்திரத்தை

சம்மட்டியால் அடித்து நொறுக்கலாம்

ஆதிமகனாம் வள்ளுவர் குறளை

ஓதி உணர்ந்து ஒலித்திடக் கேட்கலாம்

(இளைஞனே)

லட்சிய வேட்கை இடியாய் முழங்கிடவே

இடியோசை கேட்ட நாகமாய்

இன்பபகை மாய்ந்திடவே

அலட்சியம் வேண்டாம் அன்பு இளைஞனே

ஆன்றோர்க்கு தலைவணங்கி

அறிஞர் வழியில் நடந்திடவே

(இளைஞனே)