மதுரை மீனாட்சி

நீதிமன்றத் துலாக்கோலே சாயலாமா

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

நீதிமன்றத் துலாக்கோலே சாயலாமா

நிரபராதி நியாயமின்றிச் சாகலாமா சாகலாமா

பாவமோரிடம் பழியோரிடம் என்பது இதுதானா

ஆதவன் ஒளியை அமாவாசை என்பதும் சரிதானா

இது நல்லோர் வாழ்ந்திடும் திருநாடா

இல்லை பொல்லா விலங்குகள் இருள் காடா

அராஜகம் என்பதற்கோ அளவே இல்லையா

ஆண்டவா நீ இருந்தால் பதில் சொல்லைய்யா

(பாவ)

வேங்கையின் பிடியில் வெள்ளாடு

சிக்கிய வேதனை பாரய்யா

வேலியே பயிரை மேய்ந்திடும்

கொடிய சாதனை கேளய்யா

அநியாயமாக ஒரு தமிழ் மகன் சாவது நன்றோ

அன்னைத் தமிழகமே அமைதியைக் காண்பது என்றோ

துரோகிகள் கூட்டம் பிடிபடவே

தூயவர் துயரம் பொடிபடவே

தூக்கிடு கொடியை உன் தோளுக்கு மேலே

தோழா இனிதான் நம் அறப்போர் வாழுக்குவேலை

நம் அறப்போர் வாழுக்கு வேலை.