மதுரை மீனாட்சி
தங்கக்குணம் படைத்த எங்கள் தந்தையே
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
பெண்
தங்கக்குணம் படைத்த எங்கள் தந்தையே
பொங்கும் எங்கள் கண்ணீரால்
உங்கள் பாதங்களைக் குளிப்பாட்டுகின்றோமே
எங்கள் கைவிரல்களையே விழிகளாக்கி
கல்வி வெளிச்சம் தந்தவரே!
குழு
கருணைக்கடலே! பொறுமையின் இமயமே!
கருணைக்கடலே! பொறுமையின் இமயமே...
எமது இதயங்களை மலர்களாக்கி
தொடுத்த மாலையை உமது புகழ் சிகரத்தின்
கழுத்தில் அணிவிக்கின்றோம்
உம்மைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள
முடியாத எங்களை மன்னித்துவிடும்
எங்கள் தந்தையே!