காஞ்சித் தலைவன்

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே

வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே

படைகள் செல்கவே - படைகள் செல்கவே...

(வெல்க நாடு)

தாயின் ஆணை கேட்பதற்கு தலை வணங்கும் தங்கமே

தலைகொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே

சென்று வா - வென்று வா...

(வெல்க நாடு)

குமலைப் போல மழலை பேசும்

குழந்தைகளின் முத்தமும்

கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்

கோலமொழிச் சத்தமும்

உன் குன்று தோளில் புது பலத்தை வழங்குமடா நித்தமும் சென்று வா -

வென்று வா...

(வெல்க நாடு)

மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்

எதிரிகளின் கால்கள்

மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்

மாவீரர்களின் கைகள்

சென்று வா - வென்று வா...

(வெல்க நாடு)

ஓங்கிய வாள் போன்ற வடிவமடா - அவர்

ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா

வேங்கைப் புலி மன்னனடா

வீரர்களின் தலைவனடா - அவர்

கட்டளைக்குக் காத்திருந்து நல்லவனே

களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே..

(வெல்க நாடு)