காஞ்சித் தலைவன்
நீர்மேல் நடக்கலாம்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
மதனன்
நீர்மேல் நடக்கலாம்
நெருப்பிலே படுக்கலாம்
நிலை தடுமாறினால் நினைத்ததைப் பேசலாம்
மதனன்
உலகம் சுத்துது எதனாலே? நம்
உடம்பு சுத்துது அதனாலே
உலகம் சுத்துது எதனாலே?
வீரர்கள்
நம்ம உடம்பு சுத்துது அதனாலே
மதனன்
கலகம் வருவது எதனாலே?
கலயம் பொங்குது அதனாலே
கலகம் வருவது எதனாலே?
கலயம் பொங்குது அதனாலே
சொர்க்கம் தெரியுது எதனாலே?
மயக்கம் வருது அதனாலே
சொர்க்கம் தெரியுது எதனாலே
கோரஸ்
மயக்கம் வருது அதனாலே
(உலகம்)
மதனன்
கண்ணைக் கவருது எதனாலே? - இவ
கன்னிப் பொண்ணு அதனாலே
கண்ணைக் கவருது எதனாலே?
கோரஸ்
இவ கன்னிப் பொண்ணு அதனாலே
மதனன்
கன்னிப் பொண்ணு ....ம் .....ம்......
கன்னத்தில் ஒண்ணு
சிங்காரி
உலகம் சுத்துது எதனாலே?
கோரஸ்
நம்ம உடம்பு சுத்துது அதனாலே
(உலகம்)