ரங்கோன் ராதா

பொதுநலம் என்றும் பொதுநலம்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

பொதுநலம் என்றும் பொதுநலம்

புகழ் உடலைக் காக்கும் மிகபுனிதமான செயல்

பொது நலம் என்றும் பொதுநலம்

வீடுவாசல் மாடு மனை மக்கள் சுற்றம் போலாலும்

நாடு நம்நாடு நந்நாடு நாடென்று

நாமெல்லோரும் கூடிச் செய்யும் தியாகமே

(பொதுநலம்)

நாட்டிலே எதுக்கும் லாயக்கில்லாமல்

வீட்டிலே எதுவும் வேலை செய்யாமல் - உடல்

கூட்டிலே தீனியை அடைத்து வாழும்

உருப்படா மனிதனுக்குயிர் கொடுக்கும் மருந்து - நல்ல மருந்து

திண்ணைத் தூங்கிப் பண்டாரம்

திருவோடேந்தும் பரதேசி

தெருவிலே உருளும் திருப்பதி கோவிந்தா - கோவிந்தா

இந்த சோம்பேறி நடைபிணத்துக்குயிர் கொடுக்கும் மருந்து

(பொதுநலம்)

நெற்றியிலே விழுகின்ற கோடுகளை

முதுமைக் கோடுகளை

புத்தியிலே விளைகின்ற கேடுகளை

கச்சிதமாய் அகற்றிவிடும் கைகண்ட மருந்து - நல்ல மருந்து

அறிவுக்கோயில் வழிபாடு

உழைக்கும் தோழர் பண்பாடு

அறநெறியோடு அன்புடன் வாழ்வோமே வாழ்வோமே

இந்த மேலான கடமைகளுக்கொளி கொடுக்கும் மருந்து

(பொதுநலம்)