அம்மையப்பன்

காதல் புறா காதிலே பேசுவதென்னோ

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

பூங்காவனம்

காதல் புறா காதிலே பேசுவதென்னோ -

அதன் ரகசியம் ஏதோ...

பாசம் கொண்டதும் வீணோ?...

பாவை ஏன் பிறந்தேனோ?...

தளிர்மேனி சோர்ந்தாள் இளையராணி

தாவும் தென்றலே வா... வா...

சோகம் தீர்க்கவே... நீ... வா...

மான் தோல் வேங்கை வாழ்ந்திடும் காட்டில்

மாங்குயில் தான் கூவிடலாமோ...

பாசம் கொண்டதும் வீணோ?...

பாவை ஏன் பிறந்தேனோ?...

துயர் மேவும் இருளில் வீழ்ந்தாள் ராணி

தூங்கும் வெண்ணில பெண்ணே - ஒளி

தூவ வந்திடு கண்ணே...

நேசத்தினாலே மோசம் போனேன்

ஆசைக் கனவெல்லாம் பலிக்காதோ

பாசம் கொண்டதும் வீணோ

பாவை ஏன் பிறந்தேனோ...

(கா)

(கா)