அம்மையப்பன்

அம்மையப்பா அருள்புரிவாய் எல்லாம் உன் செயல்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

தொகையறா

அம்மையப்பா அருள்புரிவாய் எல்லாம் உன் செயல்

அம்மையப்பா

எல்லாம் உன் செயல் அம்மையப்பா

பாட்டு

அம்மையப்பா அருள்புரிவாய் எல்லாம் உன் செயல்

அம்மையப்பா

எல்லாம் உன் செயல் அம்மையப்பா

இம்மை மறுமை இன்பம் துன்பம்

உண்மை பொய்மை உலக பந்தம்

எல்லாம் உன் செயல் அம்மையப்பா

தேனின் விஷம் தெள்ளமுது தேனருவி தீக்காடு

எரிகுளம் எரிமலைகள் எல்லாம் உன்செயல் அம்மையப்பா

அரசன் முதல் ஆண்டிகளும் ஐயன் சிருஷ்டி உண்மையப்பா

இது ஐயன் சிருஷ்டி உண்மையப்பா

பல்லக்கு தூக்கிகளும் அதில் பவனி வருகின்ற மனிதர்களும்

அம்மையப்பா உந்தன்

எல்லைக்குள் வாழ்வோர் உண்மையப்பா

கல்லுக்குள் தேரையும் எள்ளுக்குள் எண்ணெயும்

பாம்பின் பல்லுக்குள் கொடு நஞ்சும்

அம்மையப்பா தொல்லுலகம் உந்தன்

செயல்தானென்று சொல்லுதப்பா.