பராசக்தி

இல் வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

தங்

இல் வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம்

என் இதயராணி ரூபம்

கல்

இந்த தீபத்திலே சுடராய் திகழ்வதென்

தீரனின் ரூபம்

தங்

இளமயில் ரூபம்

கல்

இல் வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம்

நம் காதல் தீபம்

தங்

கனியே! கன்னல் தமிழே! அமுதே!

பனி தூங்கும் மலரே! நிலவே!

கல்

கனிவான மொழியால் எனையே

கவர்ந்தீரே காந்தச் சிலையே

தங்

உனைக் காணும் போது நெஞ்சில்

ஊறிடும் உணர்ச்சி தனையே எழுதுவோர்

எழுத்தும் இல்லையே

தங்,கல்

திருநாளிது போல்தினம் ஆடிப்பாடியே

தேன் போல் வாழ்வோம்

(இல்)

(இல்)