களஞ்சியப் பகுதி 28

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— [ராஜா வருகிறான்.] சாந்தம்: அடடே! தம்பீ! வாங்க, வாங்க! ராஜா: வணக்கம்! சாந்: முன்னாலேயே வர்ரேன்னு சொன்னீங்க! ராஜா: ஆமாங்க! சாந்: நல்லவேளை, இப்பவாவது வந்தீங்களே! ராஜா: ஆமாம். சாந்: உட்காருங்க, ஆ...முருகா காப்பி கொண்டு வா! ராஜா: ஆ!...இல்லீங்க. பரவாயில்லீங்க. காப்பி நான் வரும்போதுதான் சாப்பிட்டு வந்தேன். நானு இங்கே வந்தது...அதாவது நேத்து நான் இங்கே வர்றதுக்கு வரும் போது...அந்த நாய் என்ன...க... சாந்: அப்ப நேத்து வந்துட்டு நாய்க்கு பயந்து போயிட்டீங்களா? ராஜா: ஆ!...இல்... சாந்: பரவா இல்லே...உட்காருங்க! ராஜா: இல்லீங்க! நீங்க ஒண்ணும் என்னை வித்தியாசமா நினைச்சுக்கப்படாது...இந்த நாய் என்னை கடிக்க வந்ததுனால தான்... சாந்: அந்த நாய் கடிக்காது; சும்மா கொலைக்கும். ராஜா: அய்யய்யே! இல்லியே! அந்த நாய் என்னைக் கடிக்கவந்ததுனாலதானே நான் அங்கே இங்கே ஓடி, சுத்தி கித்தி கடைசிலே... சாந்: வீட்டுக்கே போயிட்டீங்களா? ராஜா: ஆ! அய்யோ! அய்யோ இது!... சாந்: நீங்க ஒண்ணுக்கும் பயப்பட வேண்டியதில்லை, நேரா வந்துட வேண்டியதுதான்! [அப்போது சமரசம் வருகிறார்.] சமரசம்: உம்... ராஜா: சார்... சம: வந்துட வேண்டியதுதான்! ராஜா: வணக்கம் சார்! சம: வச்சுக்க! ராஜா: நேத்து ராத்திரி இந்த நாய் கடிக்க வந்து... சாந்: இப்பத்தானே சொன்னேன், அந்த நாய் கடிக்காதுன்னு. ஆமா, நீங்க புது நாடகம் நடத்தப் போறதா கேள்விப்பட்டேனே! ராஜா: ஆமாங்க, அகல்யா நடத்திறதா இருந்தோம்; அது... சம: யப்பா...ஏய்யப்பா! அகல்யாதானே. பஷ்ட்டு நாடகம் நடத்து--நல்ல நாடகம் நல்லா நடத்து! அவளையே அகல்யா போட்டுக்க... சாந்: ஆ! அவரு கௌதம முனிவர் போட்டுக்குவாரு! சம: ஆமா! அப்புறம் நீ இந்திரன்! நாடகம் முடிஞ்சுது...! ராஜா: ஆமாங்க...ஆமா! ஆ...சரி! என்ன சார், ரொம்ப கோபமா இருக்கீங்க போலிருக்கு? சம: என்னா கோபம்? நான் கோவிச்சு என்னா... சாந்: ஆ...! ஆ...! இல்லை இல்லை! அவரு சமாதான கமிட்டிக்கு மெம்பர்ல, அவரு அப்படித்தான் பேசுவாரு! நீங்க சொல்லுங்க, என்னா நாடகம்? ராஜா: அது...ஏதாவது சமூக நாடகம் நடத்தலாம்ன்னு, நீங்க அதுக்கு கண்டிப்பா... சாந்: நான் கண்டிப்பா வருவேன்! ராஜா: ஆ! சரிங்க, சார்... சம: என்னா? ராஜா: நீங்களும் அதுக்கு கண்டிப்பா... சம: அங்க...அங்க...சொல்லிட்டில்லேப்பா...? ராஜா: சொல்லிட்டேன்! சம: சொல்லீட்டில்ல...போதும், போதும்! ராஜா: நீங்க கோவிச்சுக்கப்படாது! சம: கோபம்...என்னா கோபம்? சாந்: நீங்க போங்க, நான் பாத்துக்கிறேன்! ராஜா: ஆ! சரிங்க, சார்...அப்ப நான்... சம: ஆதி...போ டீ! போ...போ நீ! (போகிறான். வேலைக்காரன் வருகிறான்) வேலை: இது சந்தேகந்தான்! சம: என்னடா சந்தேகம்? வேலை: நம்ப கண்ணு மாடு போட்டு இருக்கல்ல... சம: கண்ணு மாடு போட்டு இருக்கா? கண்ணு வலை வீசுது...வலை! வேலை: இல்லீங்க...நம்ப மாடு கண்ணு போட்டு இருக்கல்ல... சம: உம்... வேலை: அது பொழக்கிறது சந்தேகம்தான்னு சொன்னேன்! சாந்: எப்படிடா பொழைக்கும்? மனுஷன் நல்ல புத்தியோட இருந்து மாடு வாங்கிகிட்டு வந்தால்... வேலை: ஆமா... சம: ஏய்! பொம்பளை நல்ல புத்தியோட இருந்து அதை பாதுகாத்தால்ல... வேலை: ஆமா...! சாந்: பொம்பளை புத்தியோடதான்டா இருக்கா! சம: புத்தியோட இருக்காளா? சாந்: இல்லியா? சம: இல்லை! இல்லைங்கிறதுக்கு நான் ஆதாரம் காட்டுறேன்! [உள்ளே போய் பீரோவில் தேடுகிறார், பொட்டலத்தைக் காணாததால்...] இந்தா! அது வச்சு இருந்தேனே. அது எங்கே? சாந்: அதை ஏன் கேக்குறீங்க? அவதான் வர்லியே...ஓகோ...நீங்களே கொண்டு கொடுத்துடலாம்னு கேக்கிறீங்களா? சம: என்ன. அவ கிவன்னு உளர்ரே? சாந்: என்ன உளர்ரேன்? சம: உம்... சாந்: உண்மையைத்தான் சொல்றேன்...மனுஷன் நல்ல புத்தியோட இல்லைங்கறதுக்கு நான் ஆதாரம் காட்டுறேன்! [பொட்டலத்தைத் தேட, அது கிடைக்கவில்லை]