களஞ்சியப் பகுதி 11
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—0— வேலை: (சாந்தம்மாளிடம்) அம்மா! அய்யா என்ன ஒரு மாதிரியா பயித்தியம் மாதிரி ஒளர்ராரு? காலையிலியே எதாவது...உம் சாந்: ஹி...ஹி! அப்படி யெல்லாம் ஒண்ணுமில்லேடா! என்னா விஷயம்? வேலை: இல்லே; பாக்கி வசூல் பண்ணிக்கிட்டு வரச் சொன்னாரு. 300 ரூபா வாங்கியாந்து கொடுக்கப் போனேன், அதை பூ இங்கிராரு; மொட்டுங்கிறாரு; மாலையாக்கட்டி படத்துக்கு போடுங்கிறாரு! சாந்: ஓகோ! விஷயம் இருக்கு; எவ்வளவுடா பணம் இருக்கு? வேலை: முந்நூறு! சாந்: கொண்டா இங்கே! [கீழே] பாபு: அத்தான்! எனக்கு நீங்க 200 ரூபாய் கொடுக்கலையா ரெண்டு மொழம் கயிறுகூடவா கிடைக்காம போயிடும்? சம: உம். நீ திரிக்கிற கயிறு 2 முழம் என்ன: 20 கூட கெடைக்கும்! பாபு: அத்தான். நீங்க கொடுக்கலே...? சம: என்ன செய்வே? பாபு: கழுத்திலே துணியைச் சுற்றி இப்படியே இழுத்திடுவேன், தெரியுமா? சம: நல்லதுதான்! இழு, இழு. நெரம்புக்கு நல்லது! பாபு: அத்தான்! சம: உம்... பாபு: இழுத்திடுவேன், அத்தான். சம: இழு இழு! பாபு: அத்தான், அத்தான்...! சாந்: (அங்கு வந்து) தம்பீ...தம்பீ! இந்த மாலையைப் போட்டுக்கடா! (பணத்தை மாலையாகக் கட்டிப் போடுகிறாள்.) சம: அடே பணத்தை...என்னாது? என்னாது? சாந்: இது புது தினுசு பூமாலை? சம: பூமாலையா? பாபு: ஆ, ஆ! அத்தான், இந்த மாலைக்காகத்தான் நான் இவ்வளவு நேரம் காத்துகிட்டு இருந்தேன், தெரியுமா? சாந்: தம்பீ! அதிலே 200 பூ இருக்கு, அந்த மாலையை தியேட்டர்காரரு கழுத்திலே போட்டுடு! சம: டேய், வா இங்கே! பிடிடா இதை, பிடியிடா இதை பணத்தோட அருமை தெரியாமே அதை மாலையா கட்டுறீங்க! போ. பாபு: வர்ரேன்த்தான்! இதுவா செவந்திப்பூ? இதுவா மொட்டு? வர்ரேன் அத்தான், வர்ரேன்! சாந்: என்னங்க, அது? சம: போயி...அதை... சாந்: என்னங்க, இப்படி கோவிச்சுகிறீங்க! 200 ரூபா அவன் கேட்டான். பூ, மொட்டுன்னு சொல்லி அனுப்பிச்சுட்டீங்களே! சம: அய்யய்யோ! சாந்தம்மா, கோவிச்சுக்காதே! சாந்தம்மா, நமக்கு இப்படி கோபம் வரக்கூடாது! அவன் செலவு பண்ணிடுவானே அதுக்காகப் பாத்தேன்! சாந்: செலவழிச்சா என்ன! நம்பத் தவிற வேறு யாரு குடுப்பா? சம: கோபிச்சுக்காதேன்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறியே; இந்தா எப்பவும் நாம சந்தோஷமா இருக்கணும்; கோபமே கூடாது! எங்க கொஞ்சம் சிரி! சாந்: சிரிக்க முடியாது!