காட்சி—10

காட்சி 10·46 காட்சிகளில்

(சந்திரசேகரனும், அவன் மனைவி சரஸ்வதியும், தம்பி ஞானசேகரனும் வரும் வழியில் ஜப்பான் விமானங்கள் போட்ட குண்டுகளால் பாதிக்கப் படுகிறார்கள்)

(சந்திரசேகரனும் சரஸ்வதியும் ஆஸ்பத்திரியில்)

சந் : டாக்டர் சார்...ஞானசேகரன் எந்த பெட்டிலே இருக்கான்?

டாக் : ஞானசேகரனு? அப்படி ஒருவர் இங்கே இல்லையே.

சந் : ஆ! அப்படியானால் எங்கே இருப்பார்கள்.

டாக் : அந்தக் குண்டு வீச்சிலே மீதி இருப்பவர்கள் இவ்வளவு பேர்தான். இதைத்தவிர மற்றவர்களெல்லாம் செத்துப் போயிட்டாங்க.

சந் : ஆ! ஞானசேகரா! நீ இறந்தா போனாய்? சரஸ்வதி ஊருக்குப் போனவுடன் ஞானசேகரன் எங்கேன்னு அப்பா கேட்டாரே—கல்யாணிக்கு என்ன பதில் சொல்வேன்.

சரஸ் : டாக்டர்! அவருக்கு கொஞ்சம் சொல்லுங்க.

டாக் : மிஸ்டர் சந்திரசேகரன் மனதைக் குழப்பிக்கிடாதீங்க அமைதியாக இருங்க.