காட்சி 33

காட்சி 33

45 பகுதிகளில்

(இடம் :-மலையங்களா) மீனு :- வைத்தியரே! இந்த மலையங்களாவுக்கு வந்திருப்பது குழந்தையைக் கொல்லும் சூதாக இருக்காதே... சஞ் :- சிவ சிவா சிசுஹத்தி...உயிர்கள் காப்பாற்றுவதையே தொழிலாகக் கொண்டவன் நான்...நினைப்பேனு அந்த நாச வேலையை? மீனு :- குழந்தையை வளர்க்க அண்ணன் சம்மதிக்க மாட்டாரே! சஞ் :- இதோ......நான் இருக்கிறேன்......பிரேமா இருக்கிறாள்! எனக்குப் பிறக்கும்குழந்தை மாதிரி! மீனு :- என்னமோ...இந்தக் குழந்தை குமரன் குழந்தை! இதைப் பார்க்க குமரனுக்கு கொடுத்து வைக்கலே...... சஞ் :- அட...அவன் தான் பேய்னு...அந்த உயில்? யாராவது பத்திரமாக காப்பாற்றக் கூடாதா? மீனு :- பத்திரமாக இருக்கிறது வைத்தியரே! சஞ் :- இருக்கிறதா? மீனு :- இதோ......! (உயிலைக் கொடுக்கிறாள்) சஞ் :- ஆமா...இதை கையோடே எடுத்துக்கிட்டு வந்துட்டியே பிரசவ நேரத்திலே அண்ணன் கையிலே கிடைச்சுட்டா ஆபத்தாச்சே! (மீனு உயில் வைத்தியரிடம் கொடுக்கிறாள்) சஞ் :- ஹா-ம்! வேண்டாம்...நீயே பத்திரமாகவைச்சிரு! ஆமா....என் மருந்து பெட்டியிலே இருந்தால் யாரும் பார்க்கவே மாட்டாங்க! (வைத்தியன் தந்திரமாகப் பேசி உயிலை மீனுவிடம் இருந்து வாங்கி விட்டான்) (நாட்கள் பல கடந்தன) (மீனுவுக்கு குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை வைத்தியன் திட்டப்படி கொல்லப்படவில்லை. குழந்தையை குமரன் தூக்கிக்கொண்டு போய் விட்டான். மீனு உள்ளம் உடைந்து மல்லபங்களாவைவிட்டு வெளியேறுகிறாள். கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகும்போது ஒரு திருடன் வருகிறான்) திருடன் :- ஏய்...நில்லு மீனு :- யார் நீ? திருடன் :- யாரா? இந்த அழகான உடல் கிணற்றிலே தள்ளி சாகப்போறியே...உனக்கு அறிவு இல்லே... மீனு :- அய்யா...என்னால் பேச முடியாது! திருடன் :- நீ பேச வேண்டாம்! வா என்னோட! என் மேலே நம்பிக்கை இல்லையா உனக்கு? இந்தா பாரு! (திருடி வந்த நகைகளைக் காட்டுகிறான்) அவ்வளவையும் உன் மடியில் கழுத்திலே போட்டு உன்னை மகாராணியாக்குவேன்...வா என்னோட......ராசாத்தி மாதிரி வாழலாம்... மீனு :- ஏய்...விடு என்னை...நான் சாகத்துணிந்தவள். (திருடன் மீனுவை தன்னுடன் வரும்படி வற்புறுத்துகிறான். மீனு மறுக்கிறாள். இருவருக்கும் இடையே போலீஸ் கூட்டம் வரவே—திருடன் நகைகளை போட்டு விட்டு ஓடி விடுகிறான். மீனு திருடியாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறாள். (போலீஸாரால்))