களஞ்சியப் பகுதி 63

வெளியே

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[முத்தாயி விழுந்து கிடக்கிறாள். முத்தனும், அவன் தோழர்களும் வருகிறார்கள்] முத் : முத்தாயி! முத்தாயி!... முத்தா : அத்தான்!... முத் : கண்மணி!... [பூங்காவனம்—பலதேவர்—பூபதி—சுகதேவ் வருகிறார்கள்] பூங் : முத்தா... முத் : இளவராணி... பூபதி : முத்தா!...இளவராணி உனக்குத் தாய்!... உன்னை பெற்றெடுத்த தாய்!... முத் : ஆ... முத்தா : ஆமாம் அத்தான்! அவர்கள்தான் உங்கள் தாய்! முத் : தாயா?....அம்மா!...உங்களை எப்படி யெல்லாம் தவறாக நினைத்து விட்டேன்—என்னை மன்னித்து விடுங்கள் அம்மா! மன்னித்து விடுங்கள்!... பூங் : முத்தா!... பூபதி : முத்தா!...காதலும், தாய்மையும் வெற்றி பெற்று விட்டது!...இனி கடமையிலே வெற்றிபெற வேண்டும் நீ!...கண்ணீர்த் துளியோடு சேர்த்து வளர்ந்த கர்ம வீரனே! தாயகத்து விடுதலைக்கு போராடும் தகுதி படைத்த தளபதி நீதான்!...முத்தாயி, நீயும் உன் கணவனும் பழுதார் விடுதலைக்குப் பாடுபடுங்கள்...சோலையிலே தென்றலிலே சொகுசு! பின்னர்—சொந்த நாட்டைக் காப்பாற்ற சுழற்று வாள்! முத் : அறிவேன் அய்யா! காதலிலே கனியுதலிலே களம் போகும் பேச்சு!... கணவனுக்கும் மனைவிக்கும் தாயகமே மூச்சு!... அருமைத் தோழர்களே! அன்புத் தம்பிமார்களே!...அனைவரும் புறப்படுங்கள்!... அண்ணலின் விலங்கொடிப்ப ோம்! பழுதாரை மீட்போம்! வாரீர்! தம்பி உடையான்படைக்கஞ்சான்! இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்!...வாரீர்! வாரீர்!