களஞ்சியப் பகுதி 54

பாழ் மண்டபம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[1000 பொன்களுடன் வேதாளம் ஒரு பாழ் மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறான்] வேதா : ஆயிரம் பொன் கிடைத்தது எனக்கு! கடவுளே! உனக்கு ஆயிரம் நமஸ்காரம்...என்னை எப்படியாவது பழுதார் பாளையக்காரனாக்கிவிடு...உனக்குக் கோடி நமஸ்காரம்! முத்தாயியை அழைத்து வந்ததற்காக எனக்கு ஆயிரம் பொன்...இனிமேல் நமக்கு இந்த வேஷம் வேண்டாம்...நாமார்க்கும் குடியல்லோம்: நமனை அஞ்சோம்! [சுகதேவ் அங்கு வருகிறான். ஆத்திரம் அடைகிறான். மண்டபத்தில் இருந்த கல்லைத் தள்ளி வேதாளத்தை கொன்று விடுகிறான்] சுக : அக்கிரமக்காரனுக்கு இதுதான் முடிவு!...திருந்தினவன்தான் பொழச்சான்; இந்த உலகத்திலே!