களஞ்சியப் பகுதி 28
திரிசங்கு வீடு
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[முத்தாயி கொல்லைப்புறம் இருக்கிறாள். சுமதி வருகிறாள்] முத்தாயி : யார்? எங்கே வந்தாய்? சுமதி : முத்தாயி! முத் : பாவி! வேண்டுமென்று கேட்டிருந்தால் நூறு என்ன, ஐநூறு பொன் எப்படியாவது தேடித் தந்திருப்பேனே...... சும : என்ன—நீ என்ன சொல்லுகிறாய்? முத் : இன்னும் புரியும்படியாக சொல்லவேண்டுமா? நன்றாக நடிக்கிறாய், நாடகக்காரி! கேவலம் நூறு பொன்னுக்கு ஆசைப்பட்டு கூறு போட்டு விட்டாயே எங்கள் காதல்! சும : பொன்னுக்கு ஆசைப்பட்டேனா? நானா? முத்தாயி! சொல்வதைக் கேள்...நீ கூறியபடி முத்தனை அஞ்சல் மனையில் போய் தேடினேன். கிடைக்கவில்லை. முத் : கிடைக்கவில்லை-கிடைத்ததை வாயில் போட்டுக் கொண்டாய். சும : என்னையும் கொஞ்சம் பேசவிடேன்....... முத் : பேசியது போதும். பேசியும் பலனில்ல. போ...போய்விடு...உம்...போய்விடு பாவி...போ...... சும : இப்போது என்னை உணராவிட்டாலும், எப்போதாவது உணராமலா இருக்கப் போகிறாய்? நான் வருகிறேன். முத்தாயி : வரவே வேண்டாம்—வஞ்சகி!