களஞ்சியப் பகுதி 23

தோட்டம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[முத்தாயி பொன் மூட்டையுடன் வருகிறாள். சுமதியைப் பார்த்து.] முத்தாயி : சுமதி! வா வா! நல்ல நேரத்தில் வந்தாய்! சுமதி : என்ன அமிர்த யோகமா? முத்தாயி : ஏய், ராகு காலம்! சொல்றதைக் கேளு!...இதிலே நூறு பொன் இருக்கிறது. எப்படியாவது அவரிடம் சேர்த்துவிட வேண்டும்... சுமதி : முத்தனிடம் தானே... முத்தாயி : வேறு யாரிடம்—? சீக்கிரம் போ, சுமதி!...... சுமதி : ஆகா...ஆகா!...என்ன அவசரம்! (போகிறாள்) முத்தாயி : (தனக்குள்) பொன் கிடைத்ததும் என் கண்ணாளர் படையிலிருந்து விலகி விடுவார்...விலகியதும் அப்பாவிடம் எப்படியாவது கெஞ்சிக்கேட்டு எங்கள் விவாகத்தை நடத்திக் கொள்வோம். விவாகம் ஆனபிறகு...ஆகா! அந்த விருந்தை நினைக்கவே நெஞ்சு இனிக்கிறதே...