களஞ்சியப் பகுதி 20

தென்றல் மாளிகை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[படையில் சேருவதற்காக ஆட்கள் வரிசையாக நின்று கொண்டிருக் கிறார்கள். ஒருவன் கையொப்பமிடு கிறான் தனபதியின் முன்னில். அருகே வேதாளமும், அவன் எதிரே குறும்பனும் நிற்கிறார்கள்.] குறும்பன்: உம்...கையெழுத்து போட்டாகி விட் டது. நீ படையில் சேர்ந்து விட்டாய் என்று அர்த்தம். [அடுத்து ஒரு ஆள் கையெழுத்துப் போட வருகிறான்.] தனபதி: இனிமேல் விலகுவதாயிருந்தால் நூறு பொன் தண்டம் செலுத்த வேண்டும். ஆள்: நான் எங்க விலகப் போறேன்! தனபதி: பெயர் என்ன? ஆள்: சமாசம்! தனபதி: சண்டையில் சேருகிறாயா? ஆள்: ஆமாம். குறும்பன்: தகப்பனார் பெயர்? ஆள்: தின தயாளர்; தாயார் அன்புக்கரசி. தனபதி: கையெழுத்திடு! (தனபதி எழுந்து மற்றவர்கள் நோக்க ஆள் வரிசை காட்டப்படுகிறது.) தனபதி: சபாஷ்! வேதாளம்! இன்று நிறையத்தான் ஆட்களைக் கொண்டு வந்திருக்கிறீர். வேதாளம்: ஆமாம்! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் பிரபு. [வேதாளம் ஒரு ஆளைக்காட்டித் தொட்டு] வேதாளம்: இவன் மிகவும் தைரியசாலி. தனபதி: அப்படியா! சைன்யத்தில் ஒரு சரியான இடம் காத்திருக்கிறது. வேதாளம்: இவனைப் பார்த்தீர்களா பிரபு? நூறு அடி விழுந்தாலும் நொறுங்காத மண்டை. தலைக்கனம் அதிகம். [பக்கத்திலே உள்ள ஒரு ஆள்] ஆள்: அப்ப யுத்த மந்திரியாக்கூட வரலாம். [வேதாளம் அவன் மார்பில் அடித்து] வேதாளம்: இவனுடைய நெஞ்சுறுதி அபாரம் பிரபு. [இருவரும் சிரித்துக் கொண்டே இருக் கிறார்கள். திடீரென வேதாளம் பார்க் கிறான். முத்தன் நிற்கிறான். திடுக்கிட்டு] வேதாளம்: யார் முத்தனா? முத்தன்: ஆமாம்! வேதாளம்: நீ...... முத்தன்: படையில் சேர வந்திருக்கிறேன். வேதாளம்: பேஷ்! பேஷ்! பெருமை ததும்புது பிரபு அவர்களே! இவன் மிகவும் நல்லவன். இவனையும்...முத்தா! வா...வா...கையொப்பமிடு. [வேதாளம் மேசையிடம் ஓடி கையெழுத்துப் போட வேண்டிய ஏடுகளை எடுத்து வருகிறான். முத்தனிடம் அவைகளை நீட்டி] வேதாளம்: உம்...இதிலே கையெழுத்துப் போடு. தனபதி: பெயர் என்ன? முத்தன்: முத்தன். தனபதி: ம்...தகப்பனார் பெயர்? [முத்தன் விழிக்கிறான்] வேதாளம்: ம்...அது ஒன்றும் தேவையில்லை பிரபு. தனபதி: ஓ! தாயார் பெயராவது... முத்தன்: தாயார் காவேரியம்மாள். இறந்து விட் டார்கள். தனபதி: ம்...கையொப்பமிடு... [கையொப்பமிடுகிறான், “முத்தாயி” என தவறிப் போடுதல்.] தனபதி: என்ன? முத்தாயியா? ஹா...ஹா...ஹா... பயப்படாமல் போடு. [முத்தன் கையெழுத்திடுகிறான்]