களஞ்சியப் பகுதி 9
பலதேவர் மாளிகை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
பலதேவர் : ஆயிரக் கணக்கிலே படை வீரர்கள் இருக்கும் போது, வீர தளபதி வேலழகர் நீங்கள் இருக்கும் போது; வேங்கை நகரத்து அரசர் யாருக்காகப் பயந்து கொண்டு படையை இன்னும் பெருக்குகிறார்? வேலழகன் : படையைப் பெருக்குவது பயத்திற்காக அல்ல...பாதுகாப்புக்காக பலதேவரே. சிறுத்தை யூரான் வேங்கை நகரின் மீது எப்போது பாயலாம், எந்தக் காரணம் கிடைக்கும் களம் அமைக்க என்று காத்துக் கிடக்கிறான். அதனால் தான் படை பெருக்கும் முயற்சியில் இறங்கித் தடைகட்டாடென நம் மன்னர் உத்தரவிட்டுள்ளார். பலதேவர் : என்னால் இயன்றதைச் செய்யக்காத்துக் கிடக்கிறேன். வேலழகன் : நீர் செய்வீர். ஆனால் உமது ஊர் மக்களுக்கு வேங்கை புறத்து படையிலே சேர்வதென்றால் வெறுப்பாய்த் தானிருக்கும். ஏனெனில் அவர்களே அடிமையாகி வைத்திருக்கும் அரசனன்றே அவர்? பலதேவர் : அதெல்லாம் ஒன்றுமில்லை. முதல் அடிமையாகிய நானே அவரை முழுந்தாளிட்டு வணங்குகிறேன். முழுமனதோடு அவர் வாழவேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். தாங்கள் எதிர்பார்ப்பது போல் படையில் பலர் சேர்வார். சந்தேகமே இல்லை. வேலழகன் : சரி! நான் தங்களிடத்துக்குச் செல்ல வேண்டும். பலதேவர் : தங்களுக்காக தெற்கு ராஜ வீதியிலுள்ள தென்றல் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வேலழகன் : சந்தோஷம்