வல்வில் ஓரி

Valvil Ori

மு. கருணாநிதி

வல்வில் ஓரி

கொள்ளிமலை வள்ளல் ஓரிக்குப் பெயர் ‘வல்வில் ஓரி’ அவன் வில்லில் அப்படி வல்லமை படைத்தவன்.

ஒரு சந்தேகம் தோன்றலாம். அம்பு எய்யும் போது— அது செல்லும் போது — யானையின் உயரம் என்ன ? யானையைத் தாக்கிய பிறகு அந்த அம்பு எப்படி யானையைவிட குறைந்த உயரம் உள்ள வேங்கையைச் சென்று தாக்க இயலும் ? பிறகு வேங்கையின் உயரத்தை விடக் குறைந்த உயரமுள்ள மான்மீது எப்படி அந்த அம்பு பாயமுடியும் ? பின் மானைவிடக் குள்ளமான பன்றியின்மீதும், தரையோடு கிடக்கும் உடும்பின் மீதும் பாயமுடியும் ?

மலை உச்சியின் மீது இருந்து மன்னன் அம்பை எய்கிறான். மலைச் சரிவில் உள்ள யானை, வேங்கை, மான், பன்றி, உடும்பு என்று படிப்படியாக அம்பு பாய்ந்து செல்கிறது.

இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த காலத்தில் இந்தக் கதையைச் சொல்லி விளக்கினேன்.

நெருக்கடியினால் மதயானை கொல்லப்படுகிறது என்றால் பரவாயில்லை. பாயும் வேங்கை கொல்லப்படுகிறது என்றால் பரவாயில்லை. துள்ளிஓடும் புள்ளிமானும், எதும் அறியாத உடும்பும் செத்திட வேண்டுமா என்று கேட்டேன். எதை ஒப்பிட்டுக் கேட்டேன் என்பதை விவரிக்கவேண்டியதில்லை என்று கருதுகிறேன்.