தென்னை மரத்தில் புல்

Grass on a Coconut Tree

மு. கருணாநிதி

தென்னை மரத்தில் புல்

மக்களை ஏமாற்ற எம்.ஜி.ஆருடைய அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்களுடைய புதல்வர்கள் அத்தனை பேரும் “நாங்கள் சாராயத் தொழிற்சாலைக்கு லைசென்ஸ் வழங்க லஞ்சம் வாங்கவில்லை. சினிமா படம் எடுப்பதற்கு பத்தே முக்கால் லட்சம் ரூபாய் கடனாக வாங்கினோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

யாருமில்லாத நேரத்தில் நள்ளிரவில் தென்னந்தோப்பில் ஒரு தென்னை மரத்தில் ஒரு திருடன் ஏறினான். தேங்காய் குலைகளைப் பறிக்க! அதை தோப்புக்குச் சொந்தக்காரர் பார்த்து விட்டார்.

“இறங்கு கீழே” என்றார். இறங்கினான். ஓர் அறை கொடுத்துக் கேட்டார் ஏன் தென்னைமரத்தில் ஏறினாய் என்று! புல் பிடுங்க ஏறினேன் என்றான் அந்தத் திருடன். “தென்னை மரத்தில் ஏதடா புல்” என்றார் தோப்புக்குச் சொந்தக்காரர் “அதுதான் பார்த்தேன். புல் இல்ல இறங்கி விட்டேன்” என்றான் திருடன்.

தென்னை மரத்தில் புல் பிடுங்குகிற கதைபோல சினிமா படம் எடுக்க கடன் வாங்கினோமேயல்லாமல் லஞ்சமாக வாங்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.