புகழே நீ ஒரு புதிர்
Fame, You Are a Riddle
மு. கருணாநிதி
புகழே நீ ஒரு புதிர்
புகழே! நீ ஒரு பனிக்கட்டி. உன்னைக் கைக்குள்ளேயே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய்.
புகழே! நீ ஒரு மதுக் கலயம். உன்பால் வீழ்ந்த ஈக்கள் எழுந்ததேயில்லை.
புகழே! நீ ஒரு நிழல். உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டேயிருப்பாய்.
புகழே! நீ ஒரு புதிர்! உன்னைப் பற்றி விளக்கவே என்னால் முடியாது.