பந்தலிலே பாகற்காய்
Panthalile Paagarkai
மு. கருணாநிதி
பந்தலிலே பாகற்காய்
துக்கத்துக்கு போன இடத்தில் ஒப்பாரி வைக்க வந்தவள்:
“பந்தலிலே பாகற்காய் பந்தலிலே பாகற்காய் தொங்குதடி அக்காடி!”
என்றபடி அழ,
இன்னொருத்தி பாடினாளாம்-
“அதைப் போகும் போது பார்த்துக்கலாம் போகும் போது பார்த்துக்கலாம்” என்று
உடனே வீட்டு சொந்தக்காரி
“ஐயோ, அதை விதைக்கல்லோ விட்டிருக்கேன் விதைக்கல்லோ விட்டிருக்கேன்” என்று
பாடினாளாம்.
*