ஒண்ணு குடுமா?

Onnu Kuduma?

மு. கருணாநிதி

ஒண்ணு குடுமா?

கலைவாணரும், உடுமலை நாராயண கவியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கருத்துப் புரட்சியை உண்டாக்கினார்கள்.

அந்தக் காலத்து ‘உத்தமபுத்திரன்’ படத்தில் கலைவாணர் அய்யராக வருவார். அவர் காதலிப்பதோ - புல்கட்டு சுமக்கும் ஆதிதிராவிடப் பெண்ணை! அதனால் பல தகராறுகள் ஏற்பட்டு கடைசியில் அந்தப் பெண்ணையே உயர் ஜாதிக்காரனுக்குக் கட்டி வைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் காட்டுவோர் அந்தப் படத்தில்!

இன்றைக்கு சமூக சீர்திருத்தம் எளிதாகப் பேசி விடலாம்; ஆனால் அன்றைக்கு இத்தகைய காட்சிகளைத் துணிந்து இணைத்தவர் கலைவாணர்!

அவரது அருமையான நகைச்சுவைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு.

தந்தை வெளியில்! மகளோ அறையில்! அவளை அடைய நினைக்கும் வாலிபன் (கலைவாணர்) இடையில்!

“உள்ளே போய் உங்கள் மகளிடம் மாங்கனி பெற்றுக் கொள்கிறேன்” என்பார் கலைவாணர்.

“சரி” - என்று தந்தை கூறிவிட்டு - உள்ளே இருக்கும் மகளிடம் “இந்தாம்மா, இவன் வருவான், ஒண்ணு கொடுத்திடு” என்பார்.

கலைவாணர் உள்ளே சென்று அந்தப் பெண்ணிடம் ஒரு முத்தம் கேட்பார்! அவள் மறுப்பாள்!

உடனே கலைவாணர் வெளியே எட்டிப் பார்த்து “கொடுக்க மாட்டேன் என்கிறாள், உங்கள் மகள்” என்பார்.

தந்தையோ “ஒண்ணு குடும்மா!” என்பார், கலைவாணர் முத்தம் பெற்றுக் கொள்வார்.

எப்படிப்பட்ட நகைச்சுவை? இப்படிப்பட்ட நகைச்சுவை கலைவாணர் ஒருவரின் சிந்தனையில் தான் வரும்.

*