குழந்தையும் கிளியும்
The Child and the Parrot
மு. கருணாநிதி
குழந்தையும் கிளியும்
நாங்கள் ஒரு காலத்திலே இந்த தமிழ்நாட்டு மக்களால் தமிழ்நாட்டு அரியணையில் ஏற்றுவிக்கப்பட்டவர்கள்தான். ஒன்பதாண்டு காலம் அமைச்சர் பொறுப்பிலே இருந்தவர்கள்தான், ஏழாண்டுகாலம் முதலமைச்சராக இருந்தவன்தான். இன்றைக்கு அந்தப் பதவியில் நான் இல்லை என்பதற்காக உங்களை மறந்து விடத் தயாரில்லை. இடையில் உங்களுக்கு எங்கள்மீதேதோ ஒரு சந்தேகம்; அல்லது ஏதோஒரு கோபம். நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்ற தவறான கற்பனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
பல பாடத்திலே படித்ததுண்டு, ஒரு பார்ப்பனப் பெண் கிளி வளர்த்தாள் என்று அந்தக் கிளியை தன்னுடைய குழந்தைக்குப் பாதுகாப்பாக விட்டுவிட்டு அவள் வெளியே பல்வேறு வேலைகளுக்காகச் செல்வாள்,