கூற்றுவன் எப்படிப் மறித்தான்?

How Did Kootruvan Take Him?

மு. கருணாநிதி

கூற்றுவன் எப்படிப் மறித்தான்?

கிள்ளிவளவன் என்ற மாமன்னனுக்கு உற்ற தோழர் நப்பசலையார் என்னும் புலவர்...

கிள்ளிவளவன் இறந்துவிடுகிறான். அவன் எப்படி இறந்திருக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார் புலவர்.

எதிர்த்தோ, உறவாடியோ, சண்டையிட்டோ, கிள்ளிவளவனுடைய உயிரை எமனால் பறிக்க முடியாது. பிறகு எப்படிப் பறித்திருப்பான்?

பாடுநர் போலக் கைதொழுதேத்தி இரந்தன்றாகல் வேண்டும்.

எமன் ஒரு கவிஞன் வேடம் போட்டுக் கொண்டு போய்க் கிள்ளிவளவனுடைய உயிரைத் ‘தா’ என்று கேட்டிருப்பான். கிள்ளிவளவன் கூற்றுவனைப் புலவனெனக் கருதித் தனது உயிரைக் கொடுத்திருப்பான்...