பிரிவு 9 / 11
ஒருதலைக் காதல் — 9
One-Sided Love — 9
உறையூர்த் தித்தனது அத்தாணி மண்டபத்தில்உறைவிட்டெழுந்த வாட்களுடன் தளபதிகள் நின்றிருந்தார்.வீரவேண்மான் வெளியன் தித்தன்;வீரர்களின் அணிவகுப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்றும்வெகுண்டுவரும் கட்டி, பாணன் இருவருக்கும்தகுந்தபடி பாடம் கற்பிக்கத் தவறக்கூடாதென்றும்மரக்கிளையில் தொங்குகின்ற மலைப்பாம்புவனவிலங்குகளைச் சுற்றிவளைத்துச் சிக்கவைத்துஎலும்புகளைத் கணுக்கணுவாய் முறித்தெடுத்துஇறுதியிலே இரையாகிக் கொள்வதுபோல்பகைப்புலத்தைப் பலமுனையில் சூழ்ந்தெதிர்த்துப்பாணன், கட்டி இருவரது பல் பிடுங்க வேண்டுமென்றும்,கூர்முனை வாள் ஒன்றை விரல்களால் தடவிக்கொண்டேபோர்முறைகள் வகுத்தளித்துக் கொண்டிருந்தான்!
அப்போது அமைச்சார், பணிவாகத் தலைகுனிந்துஅரசன் தித்தனிடம்; “மன்னவனே!மாற்றார் வலிமையினைக் குறைவாக மதிக்க வேண்டாம்.மற்போரில் திறமுடைய பாணன் என்பான்கங்கநாட்டுத் தலைவன் பல்வேற்கட்டிக்குச்சிங்கம்போல் துணையாக வருகின்றான்!” என்றார்.
“உறையூரின் வளத்திற்கு ஒப்பானஉரைசால் அணிகலன்கள் தருகின்றேன்;உன் மகளை எனக்கலித்திடுக, என்று
என்ன மமதையிருந்தால் கட்டி மன்னன் கேட்டிருப்பான்?இறப்பெனும் முடிவு எல்லோர்க்கும் உண்டெனும்போது - அதுஇளமையில் வந்தால் என்ன; முதுமையில் வந்தால் என்ன!எப்போது வந்தாலும் என் கொள்கை; உடலில்தப்பாது ஓடுகின்ற உயிரோடு மானமும்உடன்கட்டை ஏறுதல் கூடாது என்பதுதான்!”
தித்தன், இவ்வாறு தீப்பிழம்புச் சொற்களாலேவிடைபகர்ந்த பின்னும்,அத்தாணி மண்டபத்தில் அமைச்சர்பிரான்; இதுகுறித்துஇத்தோடு விட்டுவிடலாம் என்றிராமல்; மன்னனிடம்“பத்தோடு பதினொன்றாக என் கருத்தை ஒதுக்கிவிடாமல்,பாணன் துணை, பல்வேற்கட்டிக்கு வாய்த்துள்ளதைபகுத்தாய்ந்து பார்த்து முடிவெடுத்தல் நலம்,” என்றார்.
“பாணனின் ஆற்றல் பற்றி கல்லாடனார் என்னும் கவிஞர்,பாட்டொன்றில் கூறுகின்றார்; பார்வேந்தே கேட்டிடுக!
1. எல்லை கடந்த தொலைவில் உள்ள எதிரிகளின்அரண் அழித்துஏறுகளுடன் பசுக்களையும் கவர்ந்து வரும் திறன்பெற்றுத் திகழ்ந்துநெய் தடவிய கரிய பூண் அமைந்த நெடுவேல்கையிலேந்திநேர்நின்று பகைவரை எதிர்த்து வெல்லும்புறங்கொடாத புலிப்போத்துஎன்று, பாணன் வீரத்தை கல்லாடனார் வியந்துரைப்பார்!
2. பல்வேறு வேற்படைகளைக் கொண்டு பகையெதிர்க்கும்மாவீரன் கங்கநாட்டுக் கட்டியென்று
மாழுவனார் புகழ்ந்துரைப்பார்! இவ்வாறுபாடல் பெற்ற வீரர் இவர் - உறையூர்மீதுபடையெடுத்து வருகின்றார் என்ற உண்மைமன்னர்பிரான் மறத்தல் தீது!’’ என்றார்.
ஆழ்ந்து சிந்தித்தே அறிவுரை வழங்கும் அமைச்சர் கருத்தை,ஆத்திரத்தில் புறந்தள்ளிப் போட்டுவிடாமல் - அரசன்,தயக்கமுடன் தலையசைத்து அவரை நோக்கி;‘‘மயக்கத்தில் கள்ளாதீர் என்னை - மானங்காக்க மாற்றுவழிதான் என்ன?’’ என்றான்.
‘‘மாவீரன் நற்கிள்ளியெனும் வெண்ணெயினைக்கையில் வைத்துக் கொண்டு,மானங்காக்கும் போர்முனையில் வெற்றியெனும்நெய்க்குத்தான் அழுவாருண்டோ?மறுப்பொன்றும் சொல்லாமல் மன்னா - இப்போதேமகன் கிள்ளிக்கு அனுப்பிடுக ஓலை’’ என்றார் அமைச்சர்!
‘‘கிள்ளிக்கா? என்மகன் கிள்ளிக்கா? என்னைஎள்ளி நகையாடிவிட்டுப்போன நற்கிள்ளி;அழைத்தால் வருவதற்கு ஒப்புவானோ? ஒப்பமாட்டான்!அமைச்சரே! அந்த முயற்சி வீண்தான்!’’ என்றான் தித்தன்!
‘‘உங்கள் அழைப்புக்குக் காத்திருக்கவில்லையப்பா கிள்ளி!உறையூரின் சிறப்புக்கு ஊனம் வராமலும்உயிரினுஞ் சோழர்குல மானம் போகாமலும்உடன்பிறப்பு ஐயைக்கோர் இழிவு நேராமலும் தடுத்திடவே
உங்கள் உத்தரவு இல்லாமலே நாட்டுக்குள் வந்துவிட்டேன்!உடன் ஆணை வழங்கிடுங்கள் உங்கள் மகனுக்கு!உறுப்பகையை ஓட்டோ விரட்டிவிட்டு வருகின்றேன்’’ - என்றபடி;
அந்திவானத்தில் அப்போது இறங்கிக் கொண்டிருந்த சூரியனின்செந்தி முகத்துடன் நற்கிள்ளி; நாளவையில் நுழைந்திட்டான்!‘மகனே!’ என்றோடி மார்புறத் தழுவிக் கொண்டான் தித்தன்!மாவீரன் தோள்மீதும் உச்சிமீதும் முத்தமிட்டான்! அவனோமண்டியிட்டுத் தந்தையின் கால்வணங்கித் தொழுதபோதுசுண்டிவிட்ட நாணயம் போல் அவையோர் எழுந்து நின்றார்!
அமைச்சர்பிரான் கண்களிலே ஒளியுமிழ; ‘‘உறையூரைஆளப் பிறந்தவனே!’’ என அழைத்துக் கிள்ளியிடம்,‘‘கட்டிக்கும், பாணனுக்கும் களத்திற்சென்று - நல்லவட்டியும் முதலுமாய்க் கொடுப்பதற்கு வந்துவிட்டாய்’’என வாழ்த்துரைத்தார்!
‘‘பகை நாட்டான் பாணனை வெல்வதற்குப் படை எதற்கு?புகை கிளப்பும் யாககுண்ட மந்திரங்கள் போதாதோ?வேற்படை பல கொண்ட கட்டியினை வீழ்த்துதற்கு,வீரர்கள்தான் எதற்காக?வேள்வி செய்து விரட்டியடிக்க முடியாதோ?’’ என்று,விளையாட்டாய்க் கண்சிமிட்டிக் கேட்ட கிள்ளியினை,
வெட்கத்தால் தலைதொங்கும் தித்தன், அணைத்தவாறு;‘‘நடந்தவைகள் நடந்தவைகளாயிருக்கட்டும் மகனே! இனிநடப்பவைகள் நல்லவைகளாயிருக்கட்டும்’’ மென்றான்!அத்துடன் அவையில் உள்ள வீரர்களை நோக்கி;
‘‘ஆமூர் விட்டுக் கிள்ளி வந்துவிட்ட சேதியினைஅறிவியுங்கள் நாட்டுக்கு!அதிர்ச்சியுற்று அஞ்சியோடப் போகின்றார் பகைவர்என்று நமதுஅத்தாணி மண்டபத்துப் பேரிகைகள் முழங்கட்டும்!’’
இவ்வாறுதித்தன் வீரவேண்மான் ஆணை அதிர்ந்தவுடன்அத்தாணி மண்டபத்துத் தோற்கருவிகள் அதிர்ந்தன!உறையூர் அரண்மனையின் மதில்கள் அதிர்ந்தன!உள்நாட்டுப் பாசறை முரசங்கள் அதிர்ந்தன!ஆயத்தமாகிவிட்டான் போருக்குக் கிள்ளியெனினும்ஐயையாம் தன் தங்கையினைக் காண்பதற்கு,அவளிருக்கும் மாளிகைக்கு விரைந்து சென்றான்;அங்கு நற்கண்ணை வந்துள்ள தகவல் அறியாமல்!
இதற்கிடையே‘உறையூர் அரண்மனைக்கு உடனே அழைத்து வா;சொன்னார்’ என்றுஒரு வீரன் தேர் ஒன்றை தெருவாயில் ஓரத்தில்நிறுத்திவிட்டு,அந்தி சாய்ந்துவிட்ட காரணத்தால் அகல்விளக்கின் முன்னாலேகுந்திக்கொண்டு கவிதை எழுதுகின்ற காவற்பெண்டை,அழைத்திட்டான்! அவசரமெனக் குறிப்பிட்டான்!
பரபரப்பில் எதற்காக என்றுகூடக் கேட்காமல்பாட்டெழுதும் ஓலையினைச் சுருட்டிப் போட்டுவிட்டுபூட்டொன்றை வீட்டுக்குக் காவலாய் மாட்டிவிட்டுபுறப்பட்டுத் தேரேறி அமர்ந்துகொண்டாள் காவற்பெண்டு!
உறையூர் அரண்மனைக்குப் போகாமல் - அந்தத்தேர்,ஒரு காத தூரம் உறையூர் எல்லை தாண்டி ஓடியதால்,தித்தன்தான் அழைத்திருப்பான் என்று நம்பி,தேர் ஏறிச் சென்ற செவிலித்தாய் திடுக்கிட்டாள்!எத்தர்களாம் கட்டியும் பாணனும் செய்திட்ட சூழ்ச்சியினால்எதிரிகளின் பாசறைக்கு இழுத்து வரப்பட்டோம்என்றுணர்ந்து,எரிமலையாய் வெடித்தபடி, ‘‘இந்த இழிதகைச் செயலுக்கு,எவன் வகுத்தான் வீரம் என்று ஓர் இலக்கணம்?’’எனக்கேட்ட காவற்பெண்டை நெருங்கி;
‘‘பசுமந்தை கவர்ந்தபின்தான்; தாயே;பகையெதிர்த்துப் போரிடுதல் இந்தப் பாணன் வழக்கம்!உறையூர் அரண்மனையில் பசுவாக நீ இருந்துஉறவாக வளர்த்த மகன் ஓடிவிட்டான் நாட்டைவிட்டு!ஒப்பில்லாப் பேரழகி ஐயை எனும் ஒப்பாரியும்உன் மடியில் தவழ்ந்து வளர்ந்தவள்தானே!
அதனால் தான்;காவற்பெண்டாம் இந்தக் காராம்பசுவைக்கவர்ந்துள்ளோம் - உன்கன்றனைய கட்டழகுப் பெட்டகமாம் ஐயை; இந்தக்கட்டியெனும் மன்னவனை,மணந்து கொள்ளச் செய்துவிடு! பின்னர்மன்னித்து மறந்திடுவோம் உறையூர்மேல்பகையுணர்வை’’ என்றான் பாணன்!
‘‘மண் வளைத்துப் பின்னர் நீங்கள்பெண் வளைத்துப் போவதற்கு - உறையூர்வாழ்
மக்கள் எல்லாம் மரங்கள் அல்லர்! அதனாலேமறந்திடுங்கள் ஐயைநல்லாளை அடைகின்றதிட்டத்தை’’ என்றாள்!
3. ‘‘கொய்யாக் கனியாம் ஐயையினை மறப்பதெனில்எளிதான காரியமோ?கொத்துக் கொத்தாய்ப் பூத்த வேங்கை மரத்தின்கவினுறு தாதுக்களைப் போன்ற அழகுத் தேமல்கள்நிறைந்துகருங்கண்களுடன் விளங்கும் கட்டழகாமொட்டுக்களாய்க்குன்றென நிமிர்ந்த கொங்கை கொண்டாள் என்றுகோதையொருத்தியைப் பரணர் வர்ணிப்பாரே; அவர்பாணியில் சென்று நானும் ஐயை முகம்நாணிடப் புகழ்ந்து பாடிடல் வேண்டும்’’
- என்ற கட்டி மன்னன் பேச்சுக் கேட்டுகாதுகளைப் பொத்திக் கொண்டாள் காவற்பெண்டு!‘‘பகைவர்களே! நீங்கள் எனை இந்தப் பாசறையில்கொன்றாலும் பரவாயில்லை;பைந்தோகை ஐயையின் வாழ்வைப் பாழ்படுத்தவிடமாட்டேன் அறிவீர்’’ என்றாள்!‘‘அதையுந்தான் பார்ப்போம்; அடே யாரங்கே?அடையுங்கள் இவளை ஒரு குண்டில்’’ என்று;ஆணையிட்டான் கட்டி மன்னன்.
1. ‘‘இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில்குவையிமில் விடைய வேற்றா ஒய்யும்
கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல்விழவு அயர்ந்தன்ன கொழும்பில் தின்றிஎழா அப் பாணன்...’’
(அகநானூறு : பாடல் : 113பாடியவர் : கல்லாடனார்)
2. ‘‘குல்லைக் கண்ணி வடுகர் முனையதுபல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர்...’’
(குறுந்தொகை : பாடல் : 11பாடியவர் : மாழுவனார்)
3. ‘‘நாகிள வேங்கையின்கதிர்த்து ஒளி திகழும் நுண்பல் சுணங்கின்மாக்கண் மலர்ந்த முலையள்...’’
(புறநானூறு : பாடல் : 352பாடியவர் : பரணர்)
பொருள் விளக்கம் :இகந்தனவாயினும் = எல்லைகடந்த தூரமாயினும்.பகைவர் ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பு = பகைகளைப்பாதுகாத்து பகைவர் உறையும் உணவு மிகுதியான அரண்!குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் = திரண்ட திமில்கொண்ட காளைகளுடன் கூடிய பகைவர்களின் பசுக்களைக்கவர்ந்திடும்! சுருணை = பூண். கனிகாழ் = நெய்கனிந்த வேலின்தண்டு. எழா அப் பாணன் = புறங்கொடாத பாணன்.நாகிள வேங்கை = கொத்துக் கொத்தாய்ப் பூத்துள்ள இளவேங்கைமரம். நுண்பல் சுணங்கு = நுண்ணிய பலவாகிய பூந்தாது.
♦ ♦ ♦