பிரிவு 11 / 11

ஒருதலைக் காதல் — 11

One-Sided Love — 11

X
நீலமயிலொன்று தோகை விரித்ததுபோல் அமைந்தகோலமிகு கட்டிலிலே கோதை ஐயை நல்லாள்அனிச்சமலர் தேகத்தை அரவியன்ன ஆடையால் மூடி;அண்ணன் வரும் தகவல் ஒன்றும் அறியாமல்,ஆழ்ந்ததோர் உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்!காவற்பெண்டின் முன்னே கட்டியும் பாணனும் ஐயையின்கட்டழகைக் கற்பனையாய்ப் புகழ்ந்ததொன்றும்மிகையே இல்லை!
பரணர், ஒரு பாவை குறித்து அவள் ஆடையுரித்துப்பாட்டெழுதினாரே; அதற்குச் சரியான எடுத்துக்காட்டாய்ச்சோழமகள், சொர்ணத்தின் வார்ப்படமாய், காளைகளைச்சொக்கவைக்கும் பாற்குடங்கள் படைத்தவளாய்க்காட்சி தந்தாள்!
தென்றல் வந்து பலகணி வழியே நுழைந்துதிருட்டுத்தனமாய் அவள் மேலாடை நகர்த்தியதால் வானத்திசைமுழுதும் பரவி நின்ற விண்மீன்கள்;திடுக்கிட்டுத் திகைத்துக் கண்சிமிட்டிப் பார்த்து,மலையிரண்டுக்கிடையே வெண்ணிலவு தோன்றி - அதுவும்,மாளிகைக்குள் மஞ்சத்தில் குளிர்பொழிவதெவ்வாறு என்று;மருமத்தை அறிவதற்கு ஆவல் மிக்ககொண்டு,மந்திராலோசனைக் கூட்டமே நடத்துகின்ற விந்தை என்னே!
அந்த இரவில்;காற்றசைத்துக் கொஞ்சுகின்ற திரையினூடேகரும்போர்வை போர்த்திய உருவமொன்றுகையிலொரு கட்டாரி பிடித்தவாறு - ஐயையின்கட்டிலுக்கருகே வந்து நின்று,சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே - அந்தப்பத்தரை மாற்றுப் பாவையினை உற்று நோக்க;அப்போது உடன்பிறப்பைக் காப்பாற்ற உடைவாளுடனேஅண்ணன் கிள்ளியும் அங்கே வந்துவிட்டான்!ஆலயத்துச் சிலைபோல அவளை அபகரித்து ஓடிவிட,ஐயை என்ன ஊமையா? செவிடா? உயிரற்ற பதுமையா?அதனால் நச்சு மூலிகையொன்றைக் கொண்டுஅவளை மயக்கமுறச் செய்த பின்தான்சிலையாக்கிச் சிறையெடுக்க முடியுமெனசிந்தித்து முடிவெடுத்ததுபோல்;கரும்போர்வை உருவம், கையிலுள்ளகட்டாரியினைக் கீழே வைத்துவிட்டுமூலிகை முடிச்சொன்றை - ஐயையின்மூக்கருகே கொண்டு செல்ல முயன்றபோது;
‘‘மூடனே! மூர்க்கனே! நில்லடா;’’ என்றுவேடனொருவன் விலங்கின்மேல் பாய்வதுபோல்வீரவேங்கை நற்கிள்ளி தோன்றி உடைவாளை,வீச்சிற்குக் குறிபார்த்து ஓங்கிவிட்டான்!இனியும் தாமதித்தால், எதிர்பார்த்தவாறுஇலட்சியம் நிறைவேறாதென்று; அந்த இருட்டுருவம்,எடுத்தது கையில் கட்டாரியை; அப்போதுதடுத்தது ஐயையின் கை எனினும் - அவளை
நெட்டித் தள்ளிப் படுக்கையில் கிடத்திநெஞ்சுக்கு நேரே கட்டாரியை உயர்த்திப்பிடித்தகரும்போர்வை உருவத்தை நோக்கி,இரும்பு நெஞ்சன் நற்கிள்ளி உடைவாளை எறிந்தவுடன்;கட்டிலருகே இருந்த தீபம் கீழே விழுந்து,காரிருள் எங்கும் கப்பிக்கொண்டதையோ!‘‘ஆ!’’ என்று வீறிட்டு அடங்கிய அவலக்குரல் ஓர்ஆரணங்கின் குரலாய் இருப்பதை உணர்ந்து‘‘ஐயை! ஐயை! அன்புத் தங்கையே! - உன்ஆவிபோக்கிடும் எமனாக நானே வந்துவிட்டேனோ?’’- என்றலறி,விளக்கொன்றை விரைவாக ஏற்றிக்கொண்டுவிழியிரண்டில் மழைபொழிய அருகிலோடித் துடித்தான் கிள்ளி!
அங்கு கண்ட காட்சி என்னே?ஐயைக்கோர் ஆபத்துமில்லை!ஆனால் நற்கண்ணை தான்உறையூர் இளவல் வீசியஉடைவாளை நெஞ்சில் தாங்கிஉயிருக்கு விடைகொடுத்துக் கொண்டிருந்தாள் - அவள்,உருவத்தை மறைத்திருந்த கரும்போர்வைஒரு மூலையிலே ஒதுங்கிக் கிடந்ததுவே!ஐயை, அவளைத் தூக்கி அணைத்துக்கொண்டு‘‘அண்ணா! இஃதென்ன அநியாயம்?’’ என்றாள்!
‘‘இளவரசி! அவரை ஒன்றும் சொல்லாதே!இது நானாகத் தேடிக்கொண்ட இனிய முடிவு!உன் எதிரில்தானே சூளுரைத்தேன்; நினைவில்லையா?- அதனை
உன் முன்னிலையில் நிறைவேற்றிக் காட்டிவிட்டேன்!‘வாழ்ந்தால் உமை மணந்து வாழ்வேன் - அன்றிவீழ்ந்தால் உமது வாள்முனையால் வீழ்வேன்!’என்று நான் சொன்னபோது;இரண்டுமே நடக்காதென்று,எடுத்தெறிந்து பேசினாரே, நற்கிள்ளி!இதோபார்; யார் வாளால் வீழ்ந்துள்ளேன் பார்!இளவரசியுன்னை சிறையெடுத்துப் போவதாகஎழுத்தைமாற்றி நான் எழுதி வீசிய ஓலையால்ஏமாந்துபோனார் உன் அண்ணன்!எதிரியெனக் கருதிக்கொண்டுஎப்படியோ என் சபதத்தைஅவரையறியாமல் நிறைவேற்றி வைத்துவிட்டார்!அதற்குநான் உனக்குத்தான் நன்றிபல கூறவேண்டும்!உனைக் கொல்வதுபோல் நான் பாசாங்கு செய்ததால்தான்உன் அண்ணனது உடைவாளை முத்தமிடும் பேறு என்உடலுக்குக் கிடைத்தது!
என் மனத்தில் நான்எழுப்பிய கோட்டையினைக்கட்டி முடிக்காவிடினும்,எண்ணியவாறு என்னுயிரினைத்திண்ணியராம் தித்தன் மகனுக்கேஅளிப்பதென்ற உறுதியிலேஅணுவளவும் தவறாமல்அற்புத வெற்றியினைக் கண்டுவிட்டேன்!’’
வேதனையின் சாயல்கூட முகத்தில் படராமல் - களத்திலோர்
வீரன் மரணத்தை ஏற்பதுபோல், நற்கண்ணை பேசப்பேச
‘‘மன்னித்துவிடு நற்கண்ணை’’ என்று கதறிமண்டியிட்டு அவள் தலையைத்தன் மடிமீதுவைத்துக்கொண்டான்!கண்ணீர் வழிந்திட்ட கிள்ளியின் கன்னத்தை, தன்காந்தள் விரல்களாலே துடைத்திட்டாள் நற்கண்ணை!‘‘போர்வாளைத்தான் காதலிப்பார் உன் அண்ணன்!பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே அல்ல!’’கூர்கொண்ட உடைவாளுக்கு உயிரைத் தந்துகொண்டேநேர்கொண்ட பார்வையுடன் நேரிழையாள் இதைச்சொல்ல;வேர் அற்ற மரம்போல நிலையற்றுத் தள்ளாடி, நற்கிள்ளி;
‘‘விழுந்தபின் தாயுடன் ஓடிவந்து உறையூர் அரண்மனையின்விளக்காக உனை ஏற்றுக்கொள்ளக் காத்திருந்தேன் - அதற்குள்,முடிந்ததே உந்தன் வாழ்வு என் அறியாமைஇருட்டாலே!’’ என்றழுதான்!
‘‘அன்னை காவற்பெண்டு வந்துவிட்டாரா?’’ என்றுஅகமகிழக் கேட்டவாறு தலையைச் சாய்த்தாள்!குபுகுபுவெனக் கொட்டுகின்ற குருதி நீர்வீழ்ச்சியிலேகுளித்துக்கொண்டே கவியரசி, ஒன்று சொன்னாள்!
‘‘இனியவரே! இன்றென்காதல் கைகூடியது! எனை,ஈன்றெடுத்த தாய் எனக்கு எவ்வாறு காவலிருந்தாள்தெரியுமா?’’
1. தாமரையின் காம்புகள் விரிந்து மலர்ந்த பூவிதழ்கள்உதிரும்படிதாணிவாழ் மக்களுக்கெல்லாம் வாழ்வளிக்க
காரிருளிலும் மழை பொழியும்! அப்போதுகாற்றால் தூக்கி வீசப்படும் அலைகளின்துளிகளைத் தடுக்கமுடியாமல்புறத்தே விடுகின்ற சிறிய கரைகளையுடையபொற்றாமரைக் குளத்தைக் காத்திடும் காவலன்போல,எனைப் பெற்றெடுத்த தாயார் கண்மூடாமல்எனைக்காத்திட்டாள்!உனைஅடைய நானோ; அவளையும் மீறி,தடாகத்துச் சிறுகரையில் மோதிவெளியேறும்தண்ணீர்த்துளிபோல ஓடிவந்தேன்!
இப்போதுகண்ணீர்த்துளி சிந்துகின்றீர்; இதுவே நமது காதல்மணவிழாவின்பன்னீர்த்துளி எனக்கருதி மகிழ்கின்றேன்!போர்வாளை மட்டுமே காதலிக்கும் என் கண்ணாளா! இந்தப்பூவிதழுக்கும் ஒருமுறை அருள் பாலிக்க உமது திருவுளச்சம்மதமோ?’’ என்றாள்!
அரும்புமீசை அவள் இதழில் பொருந்தகரும்பாய் முத்தம் நூறு கொடுத்தான்!ஒன்றை மட்டும் பெற்றுக்கொண்டு அப்போதே அவள்உயிர் பறந்து விட்டதாலே; உறையூரான் மயங்கி வீழ்ந்தான்!
1. ‘‘........... ஈங்கைத்துய் அவிழ் பனிமலர் உதிர வீசித்தொழில்மழை பொழிந்த பானாட் கங்குல்எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போலஅருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே!’’
(அகநானூறு : பாடல் : 252பாடியவர் : நற்கண்ணையார்)
பொருள் விளக்கம் :ஈங்கை = தாமரை. துய் = காம்பு. தொழில்மழை = உலகில்தொழில்களுக்கு முதன்மையான மழை.பானாட் கங்குல் = நள்ளிரவின் இருட்டு.எறிதிரைத் திவலை = வீசுகின்ற அலையின் துளி.சிறுகோட்டு = சிறிய கரையினையுடைய.
(முற்றும்)
♦ ♦ ♦

மூலமும் சான்றும்