கட்டுரை 1 / 2
வேங்கையை விரட்டும் படலம்
The Chapter of Driving Away the Tiger
ஸ்கேன் 4
No printed page numeral is visible on any scan of this article; nothing is inferred.
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
★
பத்திரிகைச் செய்தியொன்று, கான்வார் மாவட்டக் கிராமக் காட்டில் நடைபெற்றதாக வெளியாயிற்று அண்மையில்.
துள்ளியோடிய கன்றுக்குட்டி யொன்றை புதரில் பதுங்கியிருந்த வேங்கை துரத்தியதாம்.
அதைத் தாய்ப் பசு கண்டு விட்டதாம். வேங்கையை எதிர்த்துத் துரத்தியதாம். தன் கொம்புகளால் வேங்கையின் பாய்ச்சலைத் தடுக்க முனைந்ததாம்.
“வேங்கையைத் துரத்திய பசு” வேடிக்கையல்ல! உண்மை நிகழ்ச்சி.
வேங்கையைத் துரத்திடும் பசுக்கள் பலவற்றை உலகமெங்கும் காணமுடிகிறது, இப்போது!
பலஹீனனும் சில நேரங்களில் பழிதீர்த்துக் கொள்கிறான். கோழையும் வீரனாகிறான்.
அழுது அழுது, கண்ணீர் காய்ந்து விடுகிறது. கதறிக் கதறி தொண்டையும் அடைத்து விடுகிறது.
பிறகுதான் கதியற்றவன் தன் கைபலத்தை நம்புகிறான். அதன் விளைவுதான் வேங்கையைப் பசு எதிர்க்கும் விசித்திரம்!
நைந்துபோய் நரம்பும் தோலுமான நாடுகள், தங்கள் நகங்களால் வெறி தீரும் மட்டும் ஆணவக்காரர்களை கிழித்து எறிந்திருக்கின்றன.
வேங்கை வீழ்ந்திருக்கிறது; பசு வென்றிருக்கிறது; கன்று காப்பாற்றப்பட்டிருக்கிறது.
இதுதான் விடுதலைக் கிளர்ச்சி. அழுத்தப்பட்டவன் அலட்சியமாகப் பார்த்திடும் பார்வைதான் விடுதலைக் கிளர்ச்சிக்கு நாள் குறித்திடும் தூதுவன்.
ஏழை - கோழை - மோழை - எப்படிப்பட்ட ரகமாயிருந்தாலும் சரி; வேதனையால் அழுத்தப்பட்ட அழுத்தப்பட்ட - பிறகு, நிலைமை வேங்கையும் பசுவும் தான்.
பசுவிடம் விஷமும் வைத்துக்கொண்டாலே வேங்கை விரட்டப்படுகிறது என்றால், யானையின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டால்?
சிறு சிறு நாடுகளே, ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை முறிய வைத்திருக்கிறதென்றால், பெரிய நாடு - திராவிட பூமி - ஆதிக்க சக்தியால் அழுத்தப்பட்டால் விளைவு என்ன ஆகும்?
கேள்விக் குறிதான் பதில் கூறவேண்டும்.
கன்றைக் காப்பாற்ற பசு கனல் கக்கியிருக்கிறது.
சிறு நாடுகள் உரிமையைக் காப்பாற்ற சீறி எழுந்திருக்கின்றன.
இதோ பெரும் நாடு - பெருமைமிகு திராவிடம் - வாழ்ந்த வளநாடு - வீரர் கோட்டம் - மறவர் உலவிய மண் - தன் உரிமைகள் அழிக்கப்படுவதைக் கண்டு பொங்கி எழுந்துவிட்டது.
விடுதலைக் கிளர்ச்சியென்னும் இலட்சியக் காதையிலே “வேங்கையை விரட்டும் படலம்” தான் ஆரம்பமாக இருக்கும்.
விளைவைப்பற்றி கவனிப்பது கிடையாது; வெற்றி தோல்வியைக் கணக்குப் போட்டு நடைபெறுவது கிடையாது விடுதலைக் கிளர்ச்சி.
மிதிக்கப்பட்டவர்கள் கொதித்தெழுவார்கள். கொதித்தவர் பக்கத்திலே கடமை செய்வோர் அணி வகுத்து நிற்பார்கள்.
இது வேங்கையை விரட்டும் படலத்திற்கு அடுத்த படலம்.
இந்த அத்தியாயத்திலேதான் எழுத்துக்கள் ரத்தத்திலே தோய்த்து எழுதப்பட்டிருக்கின்றன பல இடங்களில். பல நாடுகளில்.
★
Assembly provenance
- scan 4 — publications/viduthalai-kilarcci/pages/0004-vengaiyai-virattum-padalam-1.md
- scan 5 — publications/viduthalai-kilarcci/pages/0005-vengaiyai-virattum-padalam-2.md
- scan 6 — publications/viduthalai-kilarcci/pages/0006-vengaiyai-virattum-padalam-3.md
- scan 7 — publications/viduthalai-kilarcci/pages/0007-vengaiyai-virattum-padalam-4.md
P3 assembly audit
- source scans — 4–7 / 4/4 records
- page-record coverage — 4/4 PASS
- source-visible Roman page numerals II–IV are preserved in the page records and omitted from this reading-copy body
- verified boundary-word joins applied — 2
- scan 5→6: யானை / யின் → யானையின்
- scan 6→7: நடைபெறு / வது → நடைபெறுவது
- omitted canonical P2 lexical body text — 0
- added unsupported body text — 0
- modernization / paraphrase — 0
- unresolved assembly issues — 0
- result — P3 COMPLETE / PASS
P5 strict visual-fidelity revalidation
- contributing scans 4–7 / 4/4 independently reopened against source pixels — PASS; - P5 corrections propagated from scan 5 — 3; - page-boundary joins யானை / யின் and நடைபெறு / வது revalidated — PASS; - unresolved fidelity discrepancies — 0; - status — STRICT-REVIEWED.
கலைஞர் மு. கருணாநிதி · விடுதலைக் கிளர்ச்சி. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்