கட்டுரை 2 / 2
ஐயர் அறிவிக்கிறார்!
Iyer Announces!
ஸ்கேன் 12, 3
The pamphlet shows no printed page numerals. Pencil folio marks on alternating scans are physical-copy marks, not printed pagination.
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சென்னைக் கடற்கரையிலே நின்று கொண்டிருக்கிறார் அந்த ஐயர் போவார். வருவாரெல்லாம் அவரைப் பார்த்துப் போகிறார்கள். பூணூல் அணிந்தவர்தான். போட்டிருக்கும் சட்டைக்குள்ளே நூல் மறைந்திருக்கிறது அவ்வளவுதான், கடற்கரைப்பக்கம் வருகிறவர்களைப் பார்த்து, அவர், "நாட்டினரே; நாட்டினரே ஒரு சேதி என்கிறார். அதோடு விடுவதில்லை அவர். "திராவிடம் என்றொரு சொல் உண்டு; அது தித்திக்கும் தேன் மொழி கற்கண்டு" என்று பாடுகிறார். ஆச்சரியப் படுவீர்கள் நீங்கள்.
அய்யராவது திராவிடத்தை ஒத்துக் கொள்வதாவது என்று திடுக்கிடுவீர்கள். உண்மை நண்பர்களே உண்மை! அன்றைக்கு ஒரு நாள் நானும் என் நண்பர்களும் கடற்கரையில் அந்த அய்யரைச் சந்தித்தோம். மேலே சொன்ன பாடலை அவர் பாடினார் 'திராவிடம் திராவிடம்' என்று கூவினார் திராவிடம் என்றாலே தீயை மிதித்ததுபோலத் துள்ளும் "ஏனோதானோ" கட்சிக்காரர் ஒருவரும் அந்த அய்யரின் முழக்கத்தைக் கேட்டு விட்டுத் தலைகுனிந்துபோய் விட்டார்.
நீங்கள் உடனே சென்னைக் கடற்கரைக்குச் செல்லுங்கள். பிரசிடென்சி கல்லூரி வாயிலிலே நின்று
கொண்டிருக்கிறார் அந்த அயம் நான் சொன்னது உண்மையா அல்லவா என்பது தெரியும். தெரிந்த
பிறகு அந்த ஏனோதானோக்கள்--எங்கேயோ கிடந்தது கள்—இடந்தேடிகள் ஆகியவர்களிடம் சொல்லுங்கள் போய்ப்பார்க்கும்படி - அதோடு கீழுள்ளவற்றையும் கவனமாய்ப் படியுங்கள்.
சென்னைக் கடற்கரையில் பிரசிடென்சி கல்லுரி வாயிலில் இருக்கும் டாக்டர் உ. வே சாமிநாதய்யர் சிலையின் கீழே எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.
"மகா மகோபாத்யாய திராவிட வித்ய பூஷண டாக்டர் சாமிநாத அய்யர்" என்பவை!
கலைஞர் மு. கருணாநிதி · திராவிட சம்பத்து. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்