பெண் சிங்கம்

வீணையில் எழுவது வேணுகானமா

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

ஆஹா...

ஆண்

வீணையில் எழுவது வேணுகானமா

திருவாதிரையின் தோடி ராகமா

திருவெண்காட்டு மகுடி நாதமா

இசைவதனால் இணையும் ஈருயிர்கள்

இணைந்தபின்பு இரண்டும் ஓர் உயிர்தானே

ஆண் / பெண்

ஆண் : காலை அரும்பி மாலை மலரும்

காதல் நோயால் நானும் உருகினேன்

பெண் : காலை அரும்பி மாலை மலரும்

காதல் நோயால் நானும் உருகினேன்

ஆண் : ஓவியமாகி நீயும் கொடுமுடி கோகிலம்தானே

கொள்ளை கொண்டாய்

நெஞ்சத்தினையே, கொடுத்துவிடு

எடுத்தபடியே

பெண் : தேனும் பாலும் கலந்த பின்னே

தனியே சுவையை பிரிக்கலாகுமா

ஆண் : இனிக்கும் தேனாய் நீயும்

துடிக்கும் ஆண்பாலாய் நானும்

திருமணம் ஆன பின்னால் தேனும் பாலுமாகலாம்

பெண் : ஆயிரம் இரவுகள் போதும்

பாயிரம் பாடல் போதும் இப்போது

ஆண் : செம்புலம் நீர்போல அன்புடை நெஞ்சமும்

நாம் கலந்தோமே