உளியின் ஓசை
அலை யெல்லாம் நடனம் ஆடும்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
அலை யெல்லாம் நடனம் ஆடும்; தமிழர்
கலை யெல்லாம் தமது பண்பைப் பாடும்.
காடுகளில் ஓடி விளையாடுகின்ற
பீடு மிகு மானினமும்,
பாடும் இசை
ஜோடிக் குயில்
தாளமொடு
பாவ மிடு
கான மயில்
புள்ளினமும்
பட்டுக்கொடி,
கொற்றக் குடை
சுற்றிச் சுழல்
வெற்றித் திரு
முத்துத் தமிழ்
கற்றுச் சுடர்
பெற்றுக் குலச்
சோழ தேசப்
புகழ் பாடத்
தொழுதிடுவோம்