மண்ணின் மைந்தன்

கண்ணின் மணிபோல

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

லல்லல லல்லல்லா

கண்ணின் மணிபோல

கனியின் விதைபோல

மண்ணின் மைந்தர் நமக்குள்ளே

கசப்பும் வெறுப்பும் எதுக்காக

மண்ணின் மைந்தர் வாழ்வதற்கு - இந்த

மண்ணில் உரிமை இல்லையா

கண்ணை காக்கும் கடமைதான்

இமைக்கு பெரிய தொல்லையா

கடமை தவறி நடப்பதற்கு

காவல் எதற்கு சொல்லையா

(கண்ணின்)

விண்ணில் ஏறவும் கடலைச்சாடவும்

வீரம் வேண்டும் விவேகம் மிகவும் வேண்டும்

விண்ணில் ஏறவும் கடலைச்சாடவும்

வீரம் வேண்டும் விவேகம் மிகவும் வேண்டும்

வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும்

விரோத உணர்வு வேரோடு சாய வேண்டும்

உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்

நாம் என்று சொல்லிப்பாருங்கள்

உதடுகள் ஒட்டும் உறவுகள் மலரும்

நான் என்று சொல்லிப்பாருங்கள்

உதடுகள் இணையாது உறவும் பிரிவாது

(கண்ணின்)