காவலுக்கு கெட்டிக்காரன்
காவலுக்கு கெட்டிக்காரன்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச்சட்டைக்காரன்
தஞ்சாவூரு ஜில்லாக்காரன் அவன்
அஞ்சாநெஞ்சம் படச்ச வீரன்
சொன்னதை செய்வோமென்பான்
அப்படி செய்ததையே சொல்வோமென்பான்
நம்பிக்கையா நடந்துக்குவான்
நம்ப நாட்டுக்காக உழைச்சிடுவான்
மாமூலு வாங்கமாட்டான்
நல்ல மனுஷங்கள் வெறுக்க மாட்டான்
மனசாட்சி கடவுளென்பான்
நம்ப மக்களுக்கு தொண்டு செய்வான்
(காவலுக்கு கெட்டிக்காரன்)
வேலியே பயிரை மேயும் - அந்த
வேதனையை பொறுக்க மாட்டான்
வெள்ளாட்டு மேலே பாயும் - ஒரு
வேங்கையாக இருக்க மாட்டான்
சாராயம் காய்ச்சும் கூட்டம் - இவன்
சப்போர்ட்டு கேட்டுதுன்னா
சத்தியமா துடிச்சிடுவான்
சவுக்காலே அடிச்சிடுவான்
பதுக்கலையும் கடத்தலையும்
பஞ்சு பஞ்சா பிச்சிடுவான்
(காவலுக்கு கெட்டிக்காரன்)