மக்கள் ஆணையிட்டால்

ஆற, அமர கொஞ்சம் யோசிச்சுப் பாரு

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

“உங்கள் ஓட்டு கதிரவனுக்கா, எங்கள் ஓட்டு கதிரவனுக்கே

நாட்டு நடப்ப பார்த்து போடுங்கம்மா ஓட்டு”

ஆற, அமர கொஞ்சம் யோசிச்சுப் பாரு

நீ அடுத்தவரும் தலைமுறையே சிந்தித்துப் பாரு

ஏற, இறங்க பாத்து எடைகளைப் போடு

நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகளைப் போடு

(ஆற, அமர)

ஓட்டுக்கு உன்னிடத்தில் வருபவன் யாரு

உழைப்பவனா, ஊரை ஏய்ப்பவனா

தேர்தல் களத்தினிலே நிற்பவன் யாரு

தியாகம் செஞ்ச வரை மோசம் செஞ்சவரு

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் உலுத்தர்களை நம்பாதேப்பா

நாட்டுக்கு உயிர் கொடுக்கும் நல்லவரை தள்ளாதேப்பா

லஞ்சப் பேய்களை வெறுக்கணுமே

ஏழை துன்பம் தீர்ப்பவரே ஜெயிக்கணுமே... அதுக்கு

(ஆற அமர)

என்ன விலை கேட்டு, போடுங்கம்மா ஓட்டு

அரிசி விலையை பாத்து போடுங்கம்மா ஓட்டு

இந்த படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா

கொள்கையே இல்லாத கொடியவன் யாரு

கொடுமைக்குப் பணியா வீரனும் யாரு

ஊழல் புரிஞ்சி வாழும் மனுஷன் யாரு

அதை ஊருக்குச் சொல்லும் உயர்ந்தவன் யாரு

உறவுக்கு கரம் கொடுப்பான் எங்க வீட்டு தம்பியப்பா

உரிமைக்கு குரல் கொடுப்பான் தென்பாண்டி சிங்கமப்பா

உதயக் கதிருதான் உதிக்குது பாரு உடன் பிறப்பே நீ ஒன்றாக சேரு

(ஆற, அமர)