வீரன் வேலுத்தம்பி

சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி

சூராதி சூரனடி வேலுத்தம்பி

சூரியனில் நெருப்பெடுப்பான், சூழ்ச்சிகளை கொளுத்திடுவான்

சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி

சூராதி சூரனடி வேலுத்தம்பி

ஏறிமலையில் அடுப்பெரிப்பான், ஏழையர்க்கு உணவளிப்பான்

எங்கள் குல தெய்வமாவான் அவன் தங்ககுல சிங்கமாவான்

பூகம்ப மேடையிலே புரட்சி கீதம் பாடிடுவான்

பொல்லாதோர் படையெல்லாம் பொடிப்பொடியா ஆக்கிடுவான்

(சுருளு மீசைக்காரனடி)

குழு

கும்மியடிப் பெண்ணே கும்மியடி குலவைப் போட்டுக் கும்மியடி

கும்மியடிப் பெண்ணே கும்மியடி குலவைப் போட்டுக் கும்மியடி

கடமைக்குத்தான் உயிர் கொடுப்பான்

கண்ணியத்தைக் காத்து நிற்பான்

இந்த தம்பியிருந்தா படைக்கு பயமில்லே

இந்த தத்துவத்தைத்தான் மறந்து போனதில்லே

தனியுடைமைக்கு தடைவிதித்து பொதுவுடைமைக்கு போர்தொடுத்து

தும்பியைப் போல் பறந்து வந்து துன்பங்களை தீர்த்துவைப்பான்