ஒரே ரத்தம்
ஒரு போராளியின் பயணமிது
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
ஒரு போராளியின் பயணமிது - அவன்
போராடி பெற்ற பரிசு இது
ஓய்வில்லாமல் உழைத்தவனே - இனி
ஓய்வு கொள்ள போறியா
ஓய்வில்லாமல் உழைத்தவனே - இனி
ஓய்வு கொள்ளப் போறியா
தாயின் மடியில் தவழ்ந்தவனே நீ
தரைக்குள் தூங்கப் போறியா
இளைஞர்களை எழுப்ப வந்த குட்டிச்சிங்கமே
இளஞ்சூரியனாய் ஒளிவீசிய சுட்டித்தங்கமே
கொலைவெறி ஜாதிபேத ஆயுதங்கள் தாக்கினாரே
கொள்கைக்காக வாழ்ந்த உந்தன் உயிரை போக்கினாரே
ஓய்வில்லாமல் உழைத்தவனே - இனி
ஓய்வு கொள்ள போறியா
இயேசு புத்தர் நபிகள் காந்தி காட்டும் வழியிலே
பேசும் புயல் பெரியார் அண்ணா அம்பேத்கர் மொழியிலே
குன்றம் போல முழங்கி நடந்த குலவிளக்கு நீதியா
உன் கொடி நிழலில் என்றும் நாங்கள் கூடுவோம் பாரடா