நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதியும்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
நெஞ்சுக்கு நீதியும்
தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணி
பூண் பஞ்சுக்கு நேர்
பல துன்பங்களெல்லாம்
உன் பார்வைக்கு நேர் பெரும் தீ
வஞ்சனையின்றி பகையின்றி சூதின்றி
வையக மாந்தரெல்லாம் வாழ்வதற்கே
கவி பாரதி பாடிய நீதி
வாய்மைசேர் நெஞ்சுக்கு நீதி
ஒருவரைப் பற்றி குறை கூறும் முன்னாலே
உன் முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே
உத்தமர்கள் அறிவுரையை
உதட்டளவில் நிறுத்தாமல்
உள்ளத்தில் பதித்திடுவாய் அண்ணே
சிந்தனை செம்மல்கள் காட்டிய நெறிகளை
செயல்களாய் குவித்திடு அண்ணே
(ஒருவர்)
சாதி மதங்களை சாய்ப்போம் என்று
புத்தர் காந்தி போதனை புரிந்தார்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
அறிஞர் அண்ணா இங்கே பிறந்தார்
கடமையை செய்வோம் உரிமையை பெறுவோம்
மடமையை மாய்த்திடுவோம்
மனிதராய் வாழ்ந்திடுவோம்
(ஒருவர்)
ஊழல் ஊழல் என்று தினம் பாடினாயே பாட்டு
உன் முகத்தை நீயே ஒரு கண்ணாடியில் காட்டு
வீண் பழிபோடும் வேலை உனக்கு
ஆகாதுடாங்கப்பா
பெரும் தூண் என்று உன் தலையில் வீழுமப்பா
(ஒருவர்)