மறக்க முடியுமா

ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

ஆண்

ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும்

உனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா?

பெண்

ஒன்பதுக்கு வட்டி உடனே கொடுக்க

என்னால் முடியுமா? என்னால் முடியுமா?

ஆண்

பெண்ணுக்குச் சுவை வட்டியில் உண்டு

அசலைப்போடம்மா அசலைப்போடம்மா

கண்ணுக்குள் ஆடும் கனியேமலரே -

கன்னம் இதுதாம்மா கன்னம் இதுதாம்மா

பெண்

கன்னத்தில் சித்திரம் கனியிதழ் முத்திரை

எண்ணிக்கொள் தருகிறேன் திருமணம்

பண்ணிக்கொள் தருகிறேன்

(இப்ப)

ஆண்

ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும்

உனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா?

பெண்

ஒன்பதுக்கு வட்டி உடனே கொடுக்க

என்னால் முடியுமா? என்னால் முடியுமா?

ஆண்

குளிப்பதில் சுகமோ? நினைவில் களிப்பதில்

சுகமோ? காதல் தளிர்ப்பதில் சுகமோ?

கேட்டதை அளிப்பதில் சுகமோ

பெண்

இருப்பது வீடு... வீணே பறப்பது ஏனோ?

எனக்கும் துடிக்குது பருவம்... ஆனால்

தடுக்குது இதயம்...