பூமாலை
கன்னம் கன்னம் கன்னம்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
கன்னம் கன்னம் கன்னம் - சந்தனக்
கிண்ணம் கிண்ணம் கிண்ணம் - என்
வண்ணம் வண்ணம் வண்ணம் - காதல்
சின்னம் சின்னம் சின்னம்
(கன்னம்)
வாலிப விருந்து வழங்குவேன் அருந்து
ஆயிரம் சாகசம் இருக்குது கைவசம்
வலிய வருது பறவை
வளர்க்கப் போகுது உறவை
நிலவு எரிக்குது நெருப்பாய்
நீயும் தழுவி அணைப்பாய்
(கன்னம்)
பார்வையில் மயக்கம் பாவையென் பழக்கம்
பழம்போல் மேனி பார்த்தும் ஏன் தயக்கம்
மீன் இரண்டு உருளுது - இதழ்த்
தேன் இரண்டு பெருகுது
மான் இரண்டு துள்ளுது
வான் இரண்டு அழைக்குது
(கன்னம்)