பூம்புகார்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற
உயிர்மூச்சை உள்ளடக்கி
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று - எனும்
திருக்குறளை மறவாதே
திசை தவறிப்போகாதே
வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க வொண்ணா வேதம்
(வாழ்க்கை)
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம்
வருமுன் காப்பவன் தான் அறிவாளி - புயல்
வருமுன் காப்பவன் தான் அறிவாளி
வந்தபின்னே தவிப்பவன்தான் ஏமாளி
(வாழ்க்கை)
துடுப்புகள் இல்லாப் படகு - அலைகள்
அழைக்கின்ற திசையெல்லாம் போகும் - தீமையைத்
தடுப்பவன் இல்லாத வாழ்வும் - அந்தப்
படகின் நிலைபோலே ஆகும்.