குறவஞ்சி

அலையிருக்குது கடலிலே

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

அலையிருக்குது கடலிலே

அசைவிருக்குது உடலிலே

கலையிருக்குது நெளிவிலே

விலையிருக்குதா உலகிலே - எனக்கு

விலையிருக்குதா உலகிலே?

(அலை)

வலையிருக்குது விழியிலே - பழக்

குலையிருக்குது மொழியிலே

சிலையிருக்குது எதிரிலே

விலையிருக்குதா உலகிலே - எனக்கு

விலையிருக்குதா உலகிலே?

(அலை)

தளுக்கு நடையில் மினுக்கும் இடையில்

துடிக்கும் இளமை தொடுக்கும் கணையில்

ஜொலிக்கும் வாழ்வில் இனிமை தவழப்

படிக்கும் இன்பக் கவிதைகள் நாம்!

(அலை)