மந்திரிகுமாரி

ஊருக்கு உழைப்பவண்டி

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

தொகையறா

ஊருக்கு உழைப்பவண்டி

ஒரு குற்றம் அறியான்டி

உதை பட்டு சாவாண்டி - எருமைக் கன்னுக்குட்டி

பாட்டு

நல்லதுக்குக் காலமில்லே

நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு

சொல்லப்போனால் வெட்கக்கேடு - எருமைக் கன்னுக்குட்டி

தொகையறா

ஏய்ச்சுப் பொழைக்கிறவன்

ஏழடுக்கு மாளிகையில்

எகத்தாளம் போடுறானே

அவன் - பேச்சை மறுக்கிறவன்

பிச்சை எடுக்கிறானே - எருமைக் கன்னுக்குட்டி

பாட்டு

நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு

வேணசெல்வம் வாரியே போவாரடி

நாடு செழிக்க பெண்ணி நாளெல்லாம் பாடுபடும்

ஏழைக்கிக் காலமில்லே எவனெவனோ வாழுகின்றான் -

எருமைக் கன்னுக்குட்டி