களஞ்சியப் பகுதி 34

பாசறை சமையல் கூடம்

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

முத்தன் : தோழர்களே! முத்தாயியை அபகரிப்பதற்காக என்னை கருவியாக உபயோகிக்கிறான் தனபதி. நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மறைந்து விடுகிறேன். வீரன் : அப்படியானால் நாங்கள் என்ன ஆவது அண்ணே? முத் : நீங்களும் எப்படியாவது இங்கிருந்து தப்பி என்னிடம் வந்து விடுங்கள். பிறகு எல்லோரும் சேர்ந்து பழுதார் விடுதலைக்கு பாடுபடுவோம். வாட்டமா நான்? வீரன் : ஜாக்கிரதையாகப் போங்கள் அண்ணே! நாங்கள் எப்படியும் வந்து சேருகிறோம்.—தந்திரமாக வெளியேற வேண்டும்.